விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் பேசிய அக்கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கேள்வி ஒன்றினை எழுப்பிள்ளார். அது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பாலகிருஷ்ணன், திராவிட மாடல், திராவிட மாடல் என்கிறார்கள். ஆனால் எங்களுக்கும் உரிமை இருக்கிறது. தமிழகத்தில் உள்ள மக்களுக்கு ஒரு மாற்று மாடல் என்று சொன்னால், அது இடது சாரி மாடல் தான் சிறந்த மாடலாக இருக்க முடியும் என்றார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் மதுரை எம்.பி... சு.வெங்கடேசனுக்கு என்ன ஆச்சு!
தொடர்ந்து பேசிய அவர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக திமுகவுடன் இணைந்து பணியாற்ற தயங்கமாட்டோம். ஆனால் அதேசமயம் திமுகவால் தொழிலாளிகள், விவசாயிகள் உரிமை பறிக்கப்பட்டாலோ, அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றபடாவிட்டாலோ அதற்கு எதிராக வருங்காலத்தில் போராட தயங்கமாட்டோம் எனத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னாலே காவல்துறை வழக்கு போடுகிறது. மாண்புமிகு மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது? போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?’ எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்" என கேட்டார். இது தான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இதையும் படிங்க: 6 பேரை காவு வாங்கிய சாத்தூர் வெடி விபத்து; அதிகாலையிலேயே அதிரடி ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!