மாசி மாதத்தை கடலாடும் மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் புண்ணிய நதிகள், கோவில் களம், கடல் என எங்கு சென்று புனித நீராடிலும் அது மகத்தான பலனை தருவதுடன் நம்முடைய பல ஜென்ம பாவத்தை தூக்கம் என்ற நம்பப்படுகிறது.
குறிப்பாக மாசி மகம் திருநாள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானதாக கூறப்படுகிறது. இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம், ஏழு தலைமுறையினரின் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான மாசி மகம் மார்ச் 12ஆம் தேதி அமைந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாசி மகத்தன்று அனைத்து நீர் நிலைகளிலும் கூடிய மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மாசி மகத்தின் போது மணிமுத்தாறு ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளனர். கடலூர் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் வெளி ஊர்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு மணிமுத்தாற்றில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதையும் படிங்க: டார்ச்சர் கொடுத்த மாமனார்..! அந்தரங்கத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகள்.. மாமியாரோடு அரங்கேற்றிய பிளான்..!
பூ, பழங்கள், காய்கறிகள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவற்றை வைத்து தர்ப்பணம் கொடுத்துள்ளனர். பொதுவாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொருட்களை ஆற்றிலேயே விட்டுச் செல்வது வழக்கம். அந்த வகையில் மணிமுத்தாற்றிலும் அனைத்து பொருட்களையும் மக்கள் விட்டுச் சென்றுள்ளனர். இதனால் மணிமுத்தாறு பகுதி முழுவதும் குப்பைகள் மண்டி கிடக்கிறது.

மாசி மக திருவிழா நடந்து முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் மணிமுத்தாற்றில் குவிந்துள்ள குப்பைகளை இதுவரை அகற்றவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணிகளை மேற்கொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கதிர்காமன் கழுத்தளவு ஆழத்தில் மண்ணில் தன்னைத்தானே புதைத்துக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி நிர்வாகத்தின் திடக்கழிவு மேலாண்மைக்கு கொண்டு சென்று தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கல்யாணம் ஆன 16வது நாளே மாப்பிள்ளைக்கு மாசாவில் விஷம் வைத்த மனைவி!