தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் திமுகவும் பாஜகவும் கடுமையாக மோதிக் கொள்கின்றன. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் மத்திய அரசையும் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தின.
இக்கூதில் பங்கேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க முயன்றபோது கடந்த முறை தமிழக மக்கள் ‘கோ பேக் மோடி’ என்று சொல்லி துரத்தினார்கள். மீண்டும் இதேபோல தமிழக மக்களிடம் முயற்சி செய்தால் ‘கெட் அவுட் மோடி’ என்று கூறி துரத்துவார்கள்’’ என்று பேசினார். இதைக் கேட்டு கொதிப்படைந்த, "கெட் அவுட் மோடி என்று சொல்லிப் பார்" என்று ஒருமையில் பேசினார். இது திமுகவினரை உசுப்பிவிட்டது.

இதையடுத்து எக்ஸ் தளத்தில் ‘கெட் அவுட் மோடி’ என்கிற ஹாஸ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆனது. திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் இதில் முக்கிய பங்கு வகித்தனர். குறிப்பாக திமுக ஐ.டி. விங்கை நேற்று முன் தினம் இதற்காகத் தீயாக உழைத்தனர்.
இதற்குப் பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, எக்ஸ் தளத்தில் ‘கெட்-அவுட் மோடி’ என்று ட்ரெண்டிங் செய்துள்ளனர். ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்போகிறோம். யார் அதிகமாக ட்ரெண்டிங் செய்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம்” என சவால் விடுத்தார்.

இந்நிலையில், நேற்று காலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என அண்ணாமலை பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து, பாஜகவினர் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹாஷ்டேக்கை எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட்டிங் செய்தனர். திமுகவின் கெட் அவுட் மோடி உலக அளவில் டிரெண்டிங் ஆனதைப் போல கெட் அவுட் ஸ்டாலினும் உலக அளவில் டிரெண்ட் ஆனது. இதற்காக வட மாநிலத்து பாஜகவினரையும் தமிழக பாஜக பயன்படுத்தியது. திமுக - பாஜகவின் அக்கப்போரால்
சமூக வலைதளங்களில் திமுகவினரும் பாஜகவினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்தியாவில் உள்ள இரண்டு கட்சிகள், தலைவர்களை உலக அளவில் அசிங்கப்படுத்திக் கொள்வது எதற்காகவாவது பயன்படுமா என்கிற விமர்சனங்கள் எழாமல் இல்லை.
இதையும் படிங்க: முடிஞ்சா இத செஞ்சு காட்டுங்க... மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஓபன் சேலஞ்ச்...!