''தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் பாஜக மத்திய அரசும், திமுக அரசும் பேசி வைத்துக் கொண்டு நாடகம் ஆடுகிறார்கள்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் இரு தினங்களாக காரசார வாக்குவாதம் நடந்து வருகிறது. பாஜக எம்.பிக்களுக்கும், திமுக எம்.பி.,க்களுக்கும் இடையே வார்த்தைப்போர் வெடித்து வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கலிடம் பேசிய சீமான், 'தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி,க்கள் நாகரிகம் மற்றவர்கள் என்று சொன்னதை 'தமிழ் மக்களை அவர் நாகரிகம் அற்றவர்கள்' என்று சொல்லிவிட்டதாக திரித்துச் சொல்கிறீர்கள். இதையே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நாகரிகமானவர் என்று சொல்லி இருந்தால், அந்தப் புகழை மட்டும் நீங்கள் வாங்கிக் கொள்வீர்கள். பழியை போட்டால் தமிழர்கள் மீது தள்ளி விடுவீர்கள்.
இதையும் படிங்க: பி.கே-விடம் ரூ.100 கோடியும் சீமான் கட்சியையும் தருகிறேன்..! விஜய்க்கு எஸ்.வி.சேகர் சவால்..!

வார்த்தை அநாகரிக்கமானது என்ற அந்த வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். இப்படி அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தி இருந்திந்திருக்க வேண்டியது இல்லை. இந்த விவாதங்களை இரு கட்சிகளும் பட்டிமன்றம் போல் நடத்திக் கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றம் போல் நடப்பதில்லை. ஒரு கருத்தை முன்வைத்து நீங்கள் இப்படி பேசுங்கள்... நாங்கள் அப்படி பேசுகிறோம் என்று பேசி வைத்துக் கொண்டு பேசுகிறார்கள். பிறகு வெளியில் வந்து கூடிக் கொள்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமாக எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ஏற்கிறதா? எதிர்க்கிறதா? தமிழ்நாடு அரசு. திமுக அரசு அந்த கொள்கையை ஏற்கிதா? இல்லையா? எதிர்க்கிறது என்றால் இல்லம் தேடி கல்வி இதில்தானே இருக்கிறது. அதை எப்படி செயல்படுத்துகிறீர்கள்? அதுதானே கேள்வி. பல இடங்களில் இந்தியை கட்டாயமாக்கி எல்லாம் கொண்டு வந்து விட்டார்கள்.

ஜவகர் நேசன் என்பவர் நமது தமிழக அரசின் கல்வித் திட்ட குழு இருந்தவர். அவர் அங்கிருந்து வெளியில் வருவதற்கு காரணமே இந்த திமுக ஆட்சி, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்கிறது. இதில், ஒன்றும் நாம் செய்வதற்கில்லை என்றுதான் அவர் வெளியேறினார். அவரே இதுகுறித்து பேட்டி எல்லாம் கொடுத்து இருக்கிறார். பி.எம் ஸ்ரீ நிதி திட்டத்தை ஏற்று நீங்கள் கையெழுத்திட்டீர்களே என்று தர்மேந்திர பிரதான் கேட்கிறார். அதை ஏன் நீங்கள் மறுக்கவில்லை. நாங்கள் எப்போது கையெழுத்திட்டோம்? எப்போது ஒப்புதல் அளித்தோம்? என்று ஏன் சொல்ல மறுகிறீர்கள். இந்த தர்க்கமே வேடிக்கையானது'' என சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீமான் பாதுகாவலர் ஜாமீன் கோரிய விவகாரம்.. காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!