அமைச்சர் பொன்முடியின் ஆபாசப்பேச்சு விவகாரம் ஓய்ந்தபாடில்லை... துணைப்பொதுச்செயலாலர் என்கிற உயர்ந்த பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு இருக்கிறார். அவர் மிது வழக்குத் தொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என குரல்கள் உயர்ந்து வருகின்றன.

பொன்முடி விவகாரம் சூடுபிடித்து அவர் கட்சிப் பதவியில் இருந்து தூக்கப்பட்ட மறுகணமே திமுக பொதுச்செயலாளரும், சீனியர் அமைச்சருமான துரைமுருகன் பதறியடித்து, மாற்றுதிறனாளிகள் குறித்து தான் பேசிய சர்ச்சை பேச்சு வருத்தம் தெரிவித்தார். இந்த விவகாரங்களையெல்லாம் சாதாரண திமுக தொண்டனே கட்சிக்கு கலங்கம் என நினைத்து வேதனைப்பட்டுவரும் நிலையில் திமுகவில் எம்.பி., கல்யாணசுந்தரம், கல்யாணமானவுடனே குழந்தை கேட்பதாக ஒரு விழா மேடையில் பகிரங்கமாக மீண்டும் ஆபாசமாக பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுககாரர்கள் எத்தனை பட்டாலும் திருந்தவே மாட்டார்களா? என பொதுமக்களே தலையிலடித்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: திருமாவை விடுங்க.. என் எதிரியை நான் கருவில் இருக்கும்போதே தீர்மானித்து விட்டேன்- சீமான் திட்டவட்டம்..!

இதே கல்யாணசுந்தரம் சரியாக ஒரு வாரத்திற்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிகை, ஊடகவியலாளர்களிடம் துண்டுச் சீட்டில் நான்கு கேள்விகளை எழுதிக் கொடுத்து இதை மட்டும் கேளுங்கள் என கேட்டுக் கொண்டு சர்ச்சையில் சிக்கினார். அந்தக் கேள்விகளை தவிர்த்து பிற கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோதுதில் சொல்ல முடியாமல் திணறினார். பொது விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போது திணறிய, துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து கேள்வி கேட்கச் சொன்ன அதே கல்யாண சுந்தரம் எம்.பி, துண்டுச் சீட்டு இல்லாமல், எழுதி வைத்து படிக்காமல், ஆபாச கருத்துக்களை தங்கு தடையின்றி, துடுக்காக, அடுக்கடுக்காகப் பேசி இருப்பதுதான் ஆச்சர்யம்..!

கும்பகோணம், சேட்டம்பாடி பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் கனவு எல்லாம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 221 வீடு கட்டுவதற்கான ஆணை இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உயர்க் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்று ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கல்யாண சுந்தரம் உட்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கல்யாண சுந்தரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "எல்லாவற்றிற்கும் அவசரப்படக்கூடாது.திருமணம் முடிந்து பத்து மாதங்களுக்கு பிறகுதான் குழந்தை பிறக்கும். திருமணம் ஆன அன்றே குழந்தை பிறந்தால் அது வேறு விதமாக தான் இருக்கும்.

கல்யாணத்திற்கு முன்பே காதல் பண்ணி கர்ப்பமானால்தான் குழந்தை பிறக்கும். திட்டங்களை செயல்படுத்துவதில் அவசரப்பட்டு பேசக்கூடாது. திட்டங்கள் செயல்படுத்த வருபவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இங்கு சிலர் விதண்டாவாதமாக பேசுகிறார்கள்" என ஆபாசமாக பேசினார். அவரது பேச்சு முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இது மீண்டும் திமுகவில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
திமுக எம்.பி ஆவதற்கு முன்பு ஒருங்கிணைந்த கும்பகோணம் ஒன்றியப் பெருந்தலைராக பதவி வகித்தவர் இந்த கல்யாண சுந்தரம். 1997-ம் ஆண்டு தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால்வள தலைவராக பதவி வகித்தார். 2006-ம் ஆண்டு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக இருந்துள்ளார். இப்படி பாரம்பரியமும், அரசியல் அனுபவமும் கொண்ட திமுக எம்.பி., கல்யாணசுந்தரம்தான் திமுகவின் ஆபாசப்பேச்சின் இந்த வார நாயகராக உருவெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது.. துணை ஜனாதிபதியை விளாசிய திருச்சி சிவா..!