சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது .தமிழக அரசை கண்டித்து பாஜக அதிமுக நாம் தமிழர் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி அதில் "யார் அந்த சார்" என்ற கேள்வியை முன்வைத்து இருந்தனர் அதாவது மாணவி விவகாரத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கையில் சார் ஒருவர் தொடர்பு கொள்வதாக குற்றவாளி செல்போனில் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவே அதை மையப்படுத்தி அதிமுக யார் அந்த சார் என்ற கேள்வியை முன்வைத்து தமிழக முழுவதும் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெல்லை மாநகரில் ஆங்காங்கே நெல்லை மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கந்தசாமி சார்பில் போஸ்டர் ஒட்டியுள்ளனர் அதில் யார் அந்த அண்ணன்? "அரசு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து படிக்க அனுப்பது, பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது என்றும் "பாதம் தாங்கி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோது நடந்த அவலம் அண்ணா பெல்ட்டால் அடிக்காதீங்க அண்ணா" "யார் அந்த அண்ணன்? 275 பெண்கள் 1100 வீடியோ என குறிப்பிட்டுள்ளனர்.

நெல்லை மாநகரின் முக்கிய வீதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதால் அரசியல் ரீதியாக பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆண்ட பரம்பரை என சொல்லகூடாதா ..இதிலும் அரசியலா ..கடுகடுத்த சபாநாயகர் அப்பாவு..!