''அறிவாலய செங்கல்லை உருவ அண்ணாமலை தேவையில்லை. இவர்களை போன்றவர்களே போதும்'' என அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக எம்.பி.,க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் இடையே வாக்குவாதம் வலுத்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதுகுறித்து கேள்வி எழுப்பிய தமிழக எம்.பிக்களை மத்திய அமைச்சர் நாகரிகமற்றவர்கள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அந்த வார்த்தையை திரும்ப பெற்றார், எனினும் அவரை கண்டித்து திமுக எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் வேலூரில் திமுக சார்பில் நடந்த 1072 கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம். ஆனால், வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியையே திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது. தமிழனை தவறாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவான், ஜாக்கிரதை” என பேசியிருந்தார்.
இதையும் படிங்க: குளவிக் கூட்டில் கை வைக்காதீங்க..! ஹிந்தி படிக்க சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு.. துரைமுருகன் தடாலடி..!

இந்நிலையில் துரைமுருகன் பேச்சுக்கு சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ்தளப்பதிவில், ''அறிவாலய செங்கல்லை உருவ அண்ணாமலை தேவையில்லை. இவர்களின் பேச்சுக்களே போதும். இப்படி லூஸ்டாக் விடுவது, பாஜகவினரை திமுக மேடையில் பேச விடுவது என திமுக அமைச்சர்கள் தனி ட்ராக் ஓட்டி வருகிறார்கள்.
மும்மொழிக்கொள்கை, பெரியார், தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் மானமுள்ள தமிழக மக்களின் ஆதரவு கிடைத்து வரும் வேளையில்.. சட்டியை கவிழ்த்த கதைதான் இம்மாதிரியான பேச்சுகள்.

வடநாட்டில் உள்ளவர்கள் பல திருமணம் செய்பவர்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஏகபத்தினி விரதர்கள் என்பது எவ்வித அடிப்படையும் இல்லாதது மட்டுமல்ல. தேவையற்றதும் கூட. மீடியா முன்பு கண்டதையும பேசக்கூடாது என கட்சியினருக்கு ஜெயலலிதா கட்டளை இட்டதும், அதிமுகவின் கட்டுக்கோப்பும் வெற்றிக்கு முக்கிய காரணம்.

அதுபோல முழுமையான தடை விதிக்காவிட்டாலும்... இப்படி ஆளாளுக்கு இஷ்டத்திற்கு பேசுவதை ஸ்டாலின் கண்ட்ரோல் செய்தே ஆக வேண்டும். குறிப்பாக, பழமைவாத அரசியல் பேசும் துரைமுருகனுக்கு. தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே உள்ள சூழலில், அறிவாலய செங்கல்லை இவர்களே உருவ நினைத்தால்.. வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாளை பார்லிமென்ட்., இன்று எம். பி.க்கள் கூட்டம்! முதல்வரின் புதிய ரூட்!