சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்டங்களுக்கான மாவட்டப் பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசியபோது அமைச்சர் சேகர்பாபுவை இ.பி.எஸ் புகழ்ந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுக அமைச்சருடன் கள்ளத் தொடர்பு..? கொந்தளித்த எடப்பாடியார்.. ஆடிப்போன நிர்வாகிகள்..!
வடசென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்களாக உள்ள பாலகங்கா மற்றும் வெங்கடேஷ்பாபுவின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த ஈபிஎஸ், அமைச்சர் சேகர்பாபுவின் பெயரை குறிப்பிடாமல் பாராட்டியதாக கூறப்படுகிறது. உங்கள் பகுதியில் ஒரு அமைச்சர் இருக்காரு, அவரு என்னென்ன செய்யராருன்னு தெரியும் இல்ல; அடிக்கடி மக்கள் நலத்திட்டங்களை கொடுக்கிறார், மக்களை சந்தித்து கூட்டம் போடுகிறார். நிறைய பரிசு பொருட்களை கொடுக்கிறார். அது போல் நீங்கள் ஏன் செய்யவில்லை என்ன கேள்வி எழுப்பியதாகவும் போலி வாக்காளர்களை கணக்கெடுத்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசியது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் தலைமையில் இயங்கும் ஒவ்வொரு செயல் வீரர்களும் களத்தில் நிற்பார்கள் என்று தெரிவித்தார்.

களத்தில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை மாற்றாரும், வசைப்பாடுபவர்களும் வாழ்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் எங்களை இயக்கும் தமிழக முதல்வருக்கே எல்லா புகழும் சொந்தம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீங்க ஓட்டுவதற்கு நானும் எடப்பாடியாரும்தான் கிடைச்சோமா..? அண்ணாமலை ஆவேசம்..!