கே.ஏ செங்கோட்டையன் தவிர்த்தது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அத்தாணியில், அதிமுக சார்பில் எம்ஜிஆர் 108.வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கின்றோம். அதற்கு சில துரோகிகள் காரணம். அவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.அடை ம் தெரியாத என்னை அடையாளம் காட்டியவர் எம்ஜிஆர். வரலாற்றை படைத்த அப்படிப்பட்ட தலைவர்களோடு தொண்டனாக இருந்து பணியாற்றியவன் நான் எனக்கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனிடம் சரணடைந்த எடப்பாடி பழனிசாமி... 'அனுபவம்' கற்றுத்தந்த பாடம்..!

தொடர்ந்து பேசிய அவர், இந்த இயக்கத்தை தொடங்கியதற்கும் வழி நடத்துவதற்கும் பல்வேறு சிரமங்களையும் பிரச்சனைகளையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எதிர்கொண்டனர். அப்படிப்பட்ட தலைவர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்றார்கள். ஆனால் இன்று அப்படி துயரத்தை சந்திக்கவில்லை.
கழகத்தின் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் உத்தரவின் பேரில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் நடைபெற வேண்டிய கூட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.

நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. தொண்டனாக இருந்து என்றும் பணியாற்ற தயாராக இருக்கிறேன். தொண்டனோடு தொண்டனாக இருந்து இயக்கத்திற்கு பணியாற்றுவேன். 2026.ல் அதிமுக.வை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம், இந்த இயக்கத்தை மீண்டும் வலிமையாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இன்றைய கூட்டத்திலும், செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவில்லை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் செய்த திட்டங்களை பட்டியலிட்டு பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்தோ, அப்போதைய திட்டங்கள் குறித்தோ எதுவும் பேசவில்லை. இந்த பொதுக்கூட்டத்தில் தான் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ அளவிற்கு செங்கோட்டையனுக்கும் போட்டோ வைத்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒன்றுபட்டால் வாழ்வு... இல்லையென்றால் தாழ்வு... எடப்பாடியை எச்சரித்த ஒபிஎஸ் ...!