இன்று சட்டப்பேரவையில் நடந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவசர காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் மாளிமை விமர்சித்துள்ளது.
2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனது உரையை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்ற என்பதை வலியுறுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக ஆளுநர் உரையை வாசிப்பதை புறக்கணித்ததோடு, அவையை விட்டும் வெளிநடப்பு செய்தார். இதனால் சட்டமன்றத்தின் மரபை ஆளுநர் ஆர்.என்.ரவி மீறி விட்டதாகக்கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும் சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பதை ஒளிபரப்பக்கூடாது என உத்தரவிடப்பட்டதாகவும், அதன் நிகழ்வுகளை நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்த உத்தரவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நடந்த விவகாரங்களைக் கண்டித்தும், அதுதொடர்பான ஒளிபரப்பை துண்டிக்க செய்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது குறித்தும் ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன எனக்குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூகநீதியில் விளம்பர மாடல் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை ...அறிக்கையில் புயலை கிளப்பிய ராம்தாஸ்

மேலும், தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல எனவும் தமிழக அரசை ஆளுநர் மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நிறுத்தியது ஏன்? தவெக தலைவர் விஜய் கேள்வி...