தமிழகத்தில் பற்றி எரியும் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கான நீதிப்போராட்டத்திற்கு யாருக்கும் அனுமதி இல்லை என கைது செய்யும் காவல்துறை திமுகவின் ஆளுநர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அனுமதி அளித்தது ஏன் என பாமக வழக்கு தொடுத்துள்ளது. உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஆளுநர் சட்டமன்றத்தில் தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என வெளிநடப்பு செய்ததை கையிலெடுத்த திமுக தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில் உடனடியாக அதற்கு காவல்துறை அனுமதியும் அளிக்கப்பட்டு இன்று அனைத்து மாவட்டங்களிலும் தலைவர்கள் தலைமையில் ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் கூடுதலாக அதிமுக-பாஜக கள்ள உறவு என்கிற புதுக்கதையுடன் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரே நாளில் எப்படி காவல்துறை போராட்டத்துக்கு அனுமதி அளித்தது என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு தமிழக முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையில் முறைப்படி விண்ணப்பித்தனர். ஆனாலும் கடைசி நேரத்தில் அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு போராட வந்தவர்களை போராட்டம் நடத்த விடாமல் வலுக்கட்டாயமாக கைது செய்து சிறையில் அடைக்கும் வேலையை காவல்துறை செய்து வந்தது. இதற்கு திமுகவின் தோழமைக் கட்சிகளுடைய தலைவர்கள் திருமாவளவன், செல்வபெருந்தகை, கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: லீவ் லெட்டர் எழுதும் ஆளுநர்..ஓடஓட விரட்டப்படுவீர்கள்..CM பொறுமைக்கு எல்லையுண்டு ..கர்ஜித்த கனிமொழி எம் .பி
ஆனாலும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி அளிக்காமல் காவல்துறை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி பேரணி நடத்தப்பட்டு, பொதுக்கூட்டங்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கே.பாலகிருஷ்ணன் ”போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும் வழக்கு போடுவதும் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் காவல்துறை செய்து வருகிறது, இது தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு அவசரநிலை உள்ளதா? என்று கேள்வியை எழுப்புகிறது” என்று பகிரங்கமாக பேசினார்.
இதை அடுத்து அவருக்கு வர சொல்லியில் பதில் அளித்து அளிக்கப்பட்டது ஆனாலும் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறார்கள் என்கிற விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று பட்டு விமர்சனம் வைத்ததை மறக்க முடியாது சென்னையில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் சீமான் போராட்ட இடத்திற்கு வந்த பொழுது மடக்கி கைது செய்யப்பட்டார். அதேபோன்று சௌமியா அன்புமணியின் மடக்கி கைது செய்யப்பட்டார்.

பாமக மகளிர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததை, எதிர்த்து மன்றத்தில் பாமக முறையீடு செய்த பொழுது இந்த பிரச்சனையை அரசியல் ஆக்காதீர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்கிற ரீதியில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக போராட்டம் தடையை மீறி பல இடங்களில் பெரிதாக வெடித்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டமன்ற கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அதிமுக பிரச்சாரமாக பதாகை ஏந்தி போராட்டம் நடத்தி வெளியேற்றப்பட்டது.
ஆனாலும் இந்த விவகாரத்தில் திடீரென நேற்றைய சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் வெளிநடப்பு செய்ததால் இந்த பிரச்சினையை கையில் எடுத்த திமுக தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. பொதுவாக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு போலீஸ் அனுமதி பெற வேண்டும். ஆனால் ஆளுங்கட்சி திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு உடனடியாக அனுமதியும் கிடைத்து நேற்று அனுமதி கேட்ட நிலையில் இன்று அனுமதி அளிக்கப்பட்டு மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இது எதிர்க்கட்சிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக விவகாரங்களில் போராடுகின்ற கட்சிகளுக்கு கோபத்தை எழுப்பி உள்ளது. நியாயமான மக்கள் பிரச்சனைகள் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் தருவதில்லை, ஆனால் இதுபோன்ற ஆளுங்கட்சி நடத்தும் போராட்டத்திற்கு உடனடியாக எப்படி அனுமதி அளிக்கப்படுகிறது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் இன்பதுரை இதே கேள்வியை எழுப்பி உள்ளார்.
“எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக போலீஸ், கவர்னருக்கு எதிராக மேடை,மைக் செட்டுடன் ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு மட்டும் இரவோடு இரவாக அனுமதி அளித்தது எப்படி? Police Act படி 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியெல்லாம் திமுகவுக்கு கிடையாதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோன்று பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் முறைப்படி ஐந்து நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்ட கேட்டபோது போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் ஆளுங்கட்சி திமுக போராட்டத்திற்கு ஒரே நாளில் அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? என வழக்கறிஞர் கே.பாலு முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தால் உடனடியாக விசாரணை எடுத்துக் கொள்வதாக நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதை அடுத்து நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்.... அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையிலிருந்து காப்பாற்றிய ஆளுநர்...