ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுதான் இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் நம்பர்-1 என்கிறது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கை.
இதனையடுத்து சந்திரபாபுவின் சொத்து மதிப்பு விவகாரம் ஆந்திராவில் புயலை கிளப்பியுள்ளது. ‘‘சந்திரபாபு நாயுடுவின் சொத்துக்களின் உண்மையான மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். அவர் மாநிலத்தின் நிதி நெருக்கடியை பயன்படுத்தி தனது சொத்து மதிப்பை மறைக்கிறார். ஆந்திர மாநிலம் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில், சந்திரபாபுவின் சொத்துக்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன’’ என குற்றம்சாட்டுகிறது எதிர்கட்சியான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் தனது தந்தையின் செல்வத்தில் மறைந்துள்ள மர்மத்தை தெளிவுபடுதியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு இது ஒரு அவமானம் இல்லையா..? வார்த்தையில் வறுத்தெடுத்த வானதி..!
‘‘கடந்த 1992 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் பால் உபரி மாநிலமாக வளர்ந்து கொண்டிருந்தபோது, பால் பண்ணையாளர்களுக்கு எப்படி உதவுவது என்று சந்திரபாபு நாயுடு யோசித்தார்.

அப்போதைய மத்திய நிதியமைச்சர் மன்மோகன் சிங், தனது பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, பால் துறையை தனியார் முதலீட்டுக்கு திறந்துவிட்டார். இதனால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பால் துறையில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உருவாகின.
அப்போதுதான் நாயுடு பால் பொருட்களை சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க ஹெரிடேஜ் ஃபுட்ஸ் என்ற யோசனையை உருவாக்கினார். 50 லட்சம் ஆரம்ப மூலதனத்துடன், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் முதல் பால் சில்லிங் யூனிட், பேங்க் ஆஃப் பரோடாவில் கடன் பெற்று சித்தூரில் அமைக்கப்பட்டது. நாயுடு ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இரண்டு ஆண்டுகள் இருந்தார்.
1994ல் சந்திரபாபு நாயுடு அமைச்சரானபோது, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் எம்.டி.யாக இருந்து விலகினார். என் அம்மா புவனேஸ்வரி நிர்வாக இயக்குநரானார். அதே ஆண்டில், நிறுவனம் ஒரு ஐபிஓ மூலம் பங்கு மார்க்கெட்டிற்கு சென்றது நிறுவனம்.
நிறுவனத்துடன் தொடர்புடைய விவசாயிகளின் நலனை உறுதிசெய்து, நிறுவனம் அனைத்து துறைகளிலும் செழிக்க எனது பெற்றோர் மிகவும் கடினமாக உழைத்ததை எல்லாம் மறக்க முடியாது.

கோவிட்-19க்குப் பிறகு, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் கடன் இல்லாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இது நிறுவனத்துடன் தொடர்புடைய ஊழியர்கள், பால் பண்ணையாளர்களின் மன உறுதியை உயர்த்தியது. தற்போது, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் மொத்த சந்தை மதிப்பு ரூ.4400 கோடி, வருவாய் ரூ.3,750 கோடி. இந்தியாவில் 12 மாநிலங்களில் எங்கள் நிறுவனம் செயல்படுகிறது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் சொத்து மதிப்பு ரூ.600 கோடி.
நாரா லோகேஷ் கூறியுள்ள இந்த புள்ளிவிவரங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக சந்திரபாபு நாயுடுவின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பொது மக்களுக்குப் புரிய வைக்கும். ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பால் துறையில் 33 வருட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
எந்தக் கடன்களும் இல்லாமல் அதிக மதிப்புள்ள நிறுவனத்தை நாயுடு, தொலைநோக்குப் பார்வையுடனும் சரியான உத்திகளுடனும் முதலிடத்திற்குக் கொண்டு சென்றார்.
நாயுடு ஒரு நொடிப்பொழுதில் பணக்கார முதல்வர் என்ற உச்சத்துக்கு ஏறவில்லை. வாழ்க்கையில் வீசிய கஷ்டங்களை தாங்கிக்கொண்டு முன்னேறிய 40 வருட அனுபவமுள்ள மூத்த அரசியல்வாதி.
இதையும் படிங்க: காலிஃபிளவரில் கஞ்சா கடத்தி வந்த பெண் யார்? சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை..!