வரலாற்றில் முதல்முறையாக ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் பற்றிய அரசின் உத்தரவு தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றே. அதன்படி அதற்கான அறிவிப்புகளை வழக்கமாக தமிழக அரசு அல்லது சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் வெளியிடப்படும்.
மேலும் இதுபற்றிய அறிவிப்பை முதலில் தலைமைச் செயலாளரே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். இந்த அறிவிப்பானது வழக்கமாக ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதுபோலவே இன்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதை அடுத்து அதிகாரிகள் அறிவிப்பில் வெளியான விவரங்களை கடந்து அறிவிப்பு வெளியான விதமே அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது பணியிட மாற்றம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு முற்றிலும் தமிழில் இருந்தது. அழகு தமிழில் அதிகாரியின் பெயர் அவர்கள் பணியிடம் யாருக்கு பதிலாக யார் பணி அமர்த்த படுகின்றனர் என பல்வேறு விவரங்களை முழு பட்டியலாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் பாடிய எட் சீரன்.. கடுப்பான போலீசார்.. மைக்கை வீசி எறிந்து கலைந்த கச்சேரி...
ஆங்கிலத்தில் மட்டுமே இது நாள் வரை இருந்த அறிவிப்புகள் தற்போது முழுக்க முழுக்க தமிழில் வெளிவந்தது அதிகாரிகளை மட்டும் இன்றி, அனைவரையுமே அவியப்பல் ஆழ்த்தியுள்ளது.
மேலும் நீண்ட காலத்திற்குப் பிறகு இவ்வாறு தமிழில் அறிவிப்பு வெளியாகி இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவப்பட்டு வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பணம் கொடுக்கிறியா இல்லையா.. கடை முன் சடலத்தை வீசிய நபர்.. அதிரடி காட்டிய போலீஸ்