சாட்டை துரைமுருகன் ஒரு பிரபலமான தமிழ் யூடியூபர், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களாக இருக்கிறார். அவர் "சாட்டை" என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் அரசியல், சமூகப் பிரச்சினைகள், தமிழ் தேசியம் தொடர்பான விவாதங்களை பதிவு செய்கிறார். அவரது வீடியோக்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன. அவர் பலமுறை அவதூறு, பொது அமைதியை சீர்குலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது சாட்டை யூடியூப் சேனலில் சமீபத்தில் சில கட்சி தலைவர்களை விமர்சித்தும், கூட்டணி குறித்தும் துரைமுருகன் பேசியதில் சீமானுக்கு உடன்பாடு இல்லாததால் இருவருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை தாறுமாறாக விமர்சித்து பல வீடியோக்களை சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
இதையும் படிங்க: சாட்டையால் தாக்கப்பட்ட அந்த 2 வீடியோ… 'அண்ணாச்சிக்காக' தம்பி மீது கடுப்பான அண்ணன் சீமான்..!

ஆனால் அங்கே சுத்தி இங்கே சுத்தி சீமானின் அடிமடியிலேயே சாட்டை துரைமுருகன் கைவைத்தது தான் அதிரடி ஆக்ஷனுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. அதாவது பாஜக மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனை சீமான் ஏன் மாமா என உறவு சொல்லி வாழ்த்துக் கூறினார் என சாட்டை யூடியூப் சேனலில் துரைமுருகன் வெளியிட்ட வீடியோ சீமானை கடும் கோபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் "சாட்டை" வலையொளிக்கும் அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தனது எக்ஸ் தளக்கணக்கில் நாம் தமிழர் கொள்கை பரப்பு செயலாளர் என்ற பொறுப்பை சாட்டை துரைமுருகன் நீக்கியதும், சீமான் உடன் இருந்த முகப்பு படத்தை மாற்றியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிளப்பியுள்ளது. இதனால் சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா? அல்லது அவர் கட்சியிலிருந்து விலகுகிறாரா? போன்ற பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.

குறிப்பாக சீமானும் தானும் இருக்கு புகைப்படத்தை நீக்கிய துரைமுருகன், விடுதலை காற்றை சுவாசிப்பதைப் போன்ற புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் வைத்துள்ளார். இதனால் அவர் நாம் தமிழர் கட்சியை விட்டு விலக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகளில் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
இதையும் படிங்க: நித்யாவை பெருமைப்படுத்தி.. இ.பி.எஸை இழிவாக்கி.. கடுப்பில் 'சாட்டை'யை தூக்கி எறிந்த சீமான்..!