மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் கல்வி கூடங்களில் கம்பர் எனும் தலைப்பில் நடந்த மாநில பேச்சுபோட்டிக்கான பரிசு விழா நடந்தது. இதில் பங்கேற்ற மதுரையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், தமிழக ஆளுநர் ஆர்என். ரவி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பி மாணவர்களையும் சொல்ல சொன்னது சர்ச்சையாகி இருக்கிறது. இதை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ள நிலையில் மாணவர்ள் மத்தியில் தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கமான மூட்டா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் செந்தாமரைகண்ணன், தலைவர் பெரியசாமி ராஜா ஆகியோர் இது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்,"ஸ்ரீராமரின் பக்தரான கம்பரை போற்றும் வகையில் நானும் சொல்கிறேன் நீங்களும் சொல்லுங்கள் என மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என சொல்ல வைத்து தானும் மூன்று முறை ஜெய் ஸ்ரீ ராம் என ஆளுநர் முழக்கமிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மாணவர்களையும் கோஷம் எழுப்ப வலியுறுத்தியது கடும் கண்டனத்திற்குரியது. அனைத்து சமூக மக்களும் பயிலக்கூடிய ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் பொறுப்புமிக்க பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபர் இவ்வாறு மதம் சார்ந்து பேசுவது என்பது மக்களிடையே குறிப்பாக மாணவர்கள் இடையே மதவாதத்தையும், பிரிவினை வாதத்தையும் தூண்டுவதாக உள்ளது. கல்விச்சூழலை பாதிப்பதாக அது அமைக்கிறது.

அரசியலமைப்புச் சட்டப் படி நடந்து கொள்ள வேண்டிய ஆளுநரே, சட்டத்திற்கு முரணாக செயல்படுவது ஏற்புடையதல்ல. ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். கல்வி வளாகங்களை காவி மயமாக்கிடும் நோக்கில் செயல்படும் ஆளுநர் பதவி விலகவேண்டும். ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சு மாணவர்கள் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #getoutravi.. நஞ்சை மனதில் சுமந்தால் எப்படி சட்டத்தை மதிப்பார்..? மனோ தங்கராஜ் விமர்சனம்..!
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி மதவெறிக் கூச்சல்.. பதவியை விட்டு உடனே தூக்குங்க... கி.வீரமணி ஆவேச தாக்கு.!!