தொகுதி மறுசீரமைப்பிற்கு மூன்று வருடங்கள் ஆகும், அதற்குள் எதற்காக இந்த அவசரம். தமிழ்நாட்டினுடைய உரிமை குரல் எந்த காலத்திலும் குறையக்கூடாது என்பதால் தான் தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடைய லைப்பாடையும் நாங்க வந்து எடுத்து சொன்னோம்.ஏனென்றால் தமிழகத்தின் உரிமையை நாங்கள் எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

ஆனால் உரிமையைப் பற்றி பேசுவதற்கு இந்த திமுக அரசுக்கு குறிப்பாக முதலமைச்சராக உள்ள ஸ்டாலினுக்கு, அதற்கு உண்டான முகாந்திரம் இருக்கின்றதா? என்றால் இல்லை. ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டினுடைய உரிமைகளை தாரை வார்த்துக் கொடுக்கிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்ததால் இன்று ராமேஸ்வரம் மீனவர் பார்த்தீங்கன்னா திருவோடு ஏந்தி போராடுறாங்க. அந்த உரிமை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல் காவிரி விவகாரம், நீட் தேர்வு அனைத்திலும் அப்படித்தான். நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ஒழிச்சிடுவேன்னு சொன்னாங்க. செங்கலை தூக்கிட்டு நம்ம உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊரா திரிஞ்சாரு. ஆனா நீட் தேர்வில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. அதேபோல யூஜிசி அதாவது யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அது நம்முடைய மாநில கல்வி உரிமை பறிக்கின்றது, அதுக்கு உண்டான நடவடிக்கையும் எதுவும் இல்லை.
இதையும் படிங்க: “இந்த விஷயத்துல மாற்று கருத்து இருக்கக்கூடாது”... அனைத்து கட்சி கூட்டத்தில் கட் அண்ட் கறாராக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்....!

இது போன்ற பல விஷயங்களை எங்களால் சொல்ல முடியும். உதாரணத்துக்கு கல்வியை வந்து அன்றைக்கு ஒரு மாநில பட்டியல் இருந்ததை அன்னைக்கு பொதுப்பட்டியல் கொண்டு போனாங்க. பொதுப்பட்டியல் கொண்டு போகும்போது அன்றைக்கு வந்து மத்தியில 17 வருஷமா இருந்தாங்க ஆட்சியில 17 வருஷமா இருந்த ஆட்சியில இருந்தவங்க அதை நினைத்திருந்தால் மாநில பட்டியலை சேர்த்து தான் நீட்டு போன்ற ஒரு கொடுமையான அரக்கன் தமிழ்நாட்டுல வந்திருக்க வாய்ப்பில்லை. அதே போன்று நிதி பகிர்வில்மாநிலத்திற்கு பாத்தீங்கன்னா வருகின்ற வருவாய் கொண்டு அதற்கேற்ற வகையில வந்து நாம் வந்து நிதி பகிர்வு அளிக்க வேண்டும் என்ற வகையில் சட்ட திட்டத்தை கொண்டு வரணும்.

உதாரணத்துக்கு சொல்றேன் 69% இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 50 சதவீதத்துக்கு போகக்கூடாதுன்னு தீர்ப்பு கொடுத்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சும்மா இருந்தாங்களா, உடனே என்ன பண்ணாங்க பிரதமரை சந்திச்சாங்க. அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி, 69 சதவீத இட ஒதுக்கீடு இன்று வரை இருக்க காரணமாக இருந்தாங்க. அந்த மாதிரி வந்து உறுதியான ஒரு நடவடிக்கை எடுக்கணும்

ஆனால் இப்போது இருக்கின்ற அந்த சூழ்நிலையை பார்க்கும்போது ஒரு நாடகம் அரங்கேறி இருக்கிறது. உண்மையிலேயே தமிழ்நாட்டுல எந்த அளவுக்கு வந்து ஒரு கடுமையான பாதிப்பு இருக்கும் அப்படின்றதை உணர்ந்து இந்த அரசு மாநிலத்தின் முழு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: இந்தி மொழிய திணிக்காதீங்க..! மொழிச் சமத்துவமே திமுகவின் இலட்சியம் - முதல்வர் ஸ்டாலின்..!