மாநில உரிமைகளை மீட்டு எடுக்க வேண்டும் என்பதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்ற நிலையில், மாநில உரிமைகளை மீட்க குழு அமைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை..! முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

முதலமைச்சர் அமைத்த குழு வெளிப்படையாக செயல்படும் என்றும் கூறினார். ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இது போன்ற ஆய்வுகள் தேவை என கூறிய நீதிபதி குரியன் ஜோசப், மாநில உரிமைகளை பாதுகாக்கும் பணிக்காக நான் ஊதியம் பெறப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிஞ்சுகள் மனதில் வன்முறை..! அரிவாள் வெட்டு சம்பவத்தில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை..!