கர்நாடகாவில் செல்வாக்கு மிக்க அமைச்சரை ஹனிட்ராப்பில் சிக்க வைக்க முயற்சி நடந்ததாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த அமைச்சர் யார்? எந்த அமைச்சரை யார் ஹனிட்ராப்பில் சிக்க வைக்க முயன்றார்கள் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கு கூட்டுறவு அமைச்சர் கே.என். ராஜண்ணா சட்டமன்றத்தில் பதிலளித்தார். அவர் தன்னை சிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய அவர், ''எனக்கு எதிராக ஒரு மோசடி முயற்சி நடத்தப்பட்டது. கடந்த பல நாட்களாக நடந்து வரும் ஹனிட்ராப் குறித்த விவாதத்தை தெளிவுபடுத்துகிறேன். மத்திய, மாநில அளவிலான தலைவர்கள் 48 பேரின் ஹனிட்ராப் வீடியோ சிடிக்கள் இருக்கிறது'' என ராஜண்ணா கூறி இருப்பது கர்நாடக மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹனிட்ராப் வீடியோ பிரச்சினையை முதலில் பாஜக எம்.எல்.ஏ., சுனில் குமார் கர்கலா சபையில் எழுப்பினார். இதன் பின்னர், இன்று சட்டமன்றத்தில் இது குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது. பாஜக எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் யட்னல், ஹனிட்ராப் வீடியோ பிரச்சினையை அவையில் எழுப்பினார். கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா நேரடியாக குறிவைக்கப்பட்டு, ஹனிட்ராப் வீடியோவில் சிக்க வைக்கப்பட்டதாக வெளிப்படையாகக் கூறினார்.
இதையும் படிங்க: வாரம் 2 சரக்கு பாட்டில்கள் மக்களுக்கு இலவசமாகக் கொடுங்க முதல்வரே..! சட்டசபையில் கெஞ்சிய எம்.எல்.ஏ..!
அமைச்சர் கே.என்.ராஜண்ணா எழுந்து நின்று, எம்.எல்.ஏ. யட்னலின் பேச்சுக்கு பதிலளித்து, யட்னல் என் பெயரைச் சொன்னால், நான் உங்களுக்கு உண்மையைச் சொல்வேன். நான் சொல்வது என்னவென்றால், தவறான தகவல்களைப் பொதுவில் பரப்பக்கூடாது. இரண்டு அமைச்சர்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

கர்நாடகா ஒரு சிடி தொழிற்சாலை என்று பலர் கூறுகிறார்கள். இந்த விஷயம் இதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. தேசியத் தலைவர்களுக்கும் ஹனிட்ராப் வீடியோ விவகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நான் எழுத்துப்பூர்வமாக புகார் அளிப்பேன். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். சுமார் 48 மாநில மற்றும் மத்திய அளவிலான தலைவர்களின் வீடியோக்கள் ஹனிட்ராப்பில் சிக்கியுள்ளது.

இது நமது மாநிலத்திற்கு மட்டும் சார்ந்த்ததல்ல. இதில், பல்வேறு தேசிய அளவிலான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் உள்ளனர். இந்த சிடி விவகாரத்தில் 48 பேர் உள்ளனர். பொது வாழ்வில் இது நடக்கக்கூடாது. அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். மக்கள் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சரை நான் வலியுறுத்துகிறேன். அதில் யார் இருக்கிறார்கள்? அது என்ன? விசாரணை மூலம் எல்லாம் வெளிவர வேண்டும். இது ஒரு தொற்றுநோய், இதை பொதுவில் அம்பலப்படுத்த வேண்டும்'' என்றார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, ராஜண்ணா எழுத்துப்பூர்வமாக புகார் அளிப்பார். எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டால், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுவேன்'' என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையே, ராஜராஜேஸ்வரி நகர் பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவிடம், “என் மீதான வழக்கு குறித்து நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அப்போது, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எழுத்துப்பூர்வ புகார் அளிக்குமாறு பரிந்துரைத்தார்.
இடைக்கால உரையை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், ''விசாரணை என்னவாக இருக்கும் என்பதை அறிவிக்க வேண்டும். பலர் ஹனிட்ராப்பில் சிக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்'' என்று அவர் கோரினார்.
இதையும் படிங்க: 'ஆண்களுக்கு வாரம் 2 மது பாட்டில்கள் இலவசமாகக் கொடுங்கள்..! சட்டசபையில் கெஞ்சிய எம்.எல்.ஏ..!