அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீட்டை திறக்க யாரும் வராததால் அதிகாரிகள் சோதனையிடாமலேயே திரும்பிச் சென்றனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது. சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதாவது குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய புகாரை அடுத்து இந்த புதிதாக அமலாக்கத் துறையினர் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் மற்றும் அவர் பொறுப்பு வகித்துள்ள மதுபானம் மற்றும் ஆயர் தீர்வு தொடர்புடைய இடங்களிலும் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது இந்த மதுபான கொள்முதல் தொடர்பாக எழுந்த முறைக்கேடு புகார்கள் குறித்து இந்த சோதனையானது நடைபெறுகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக் தலைமை அலுவலகம்- திமுக எம்.பி நிறுவனத்தில் ED ரெய்டு..! செந்தில் பாலாஜிக்கு செக்..?
தொடர்ந்து ஜெகத்ரட்சகனின் மதுபான ஆலை மற்றும் அலுவலகங்கள், எஸ்என்ஜே குரூப்ஸ் உள்ளிட்ட டாஸ்மாக்கிற்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் கொள்முதல் செய்வது தொடர்பான சில ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் கிடைத்துள்ளதாகவும், அதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கணக்கு வழக்கிற்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

இதனிடையே, ஒரே ஒரு இடத்தில் மட்டும் அமலாக்கத்துறையினர் சோதனையே நடத்த முடியாமல் திரும்பிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூரில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் வீட்டில் சோதனையிட 2 வாகனங்களில் அமலாக்க துறையினர் வந்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டப்பட்ட வீட்டில் சோதனையிட காத்திருந்தனர். தொடர்ந்து வீட்டின் பூட்டை திறக்க யாரும் வராததால் ஆறு மணி நேரமாக காத்திருந்த அமலாக்கத் துறையினர் தற்போது அங்கிருந்து சோதனையிடாமல் கிளம்பி சென்று விட்டனர்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு குறி.. மதுபான நிறுவனங்களிலும் ரெய்டு- பின்னணியை விளக்கிய ED அதிகாரி..!