சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பாக அதிக அளவில் பெண் போலீசாரும் ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றனர் மகளிர் அணியை சமாளிக்க அங்கே பெண் காவலர்கள் குவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீமான் வீட்டிற்கு செல்ல முயலும் நாம் தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் இடும்பவனம் கார்த்தி உள்ளிட்ட நாதக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீஸ் தடுப்புகளையும் தாண்டி அத்துமீறி சீமான் வீட்டின் முன்பு குவிய ஆரம்பித்தனர். அண்ணி வீட்டில் தனியாக இருப்பார்கள், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சீமான் வீட்டிற்கு செல்லக்கூடிய இருபுறமும் காவல்துறையினர் பேரிகார்டுகள் அமைத்து சுமார் 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இருந்தாலும் காவல்துறையினுடைய அந்த பாதுகாப்பையும் மீறி அவர்கள் உள்ளே சென்று கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி நுழைந்து சீமான் இல்லத்தின் முன்பாக குவிந்திருக்கக்கூடிய தொண்டர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சீமானை ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போலயே... போலீசாருடன் நாதக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்...!
இதனிடையே, சீமான் வீட்டிற்கு அளவுக்கு அதிமாக பெண் தொண்டர்கள் வர ஆரம்பித்துள்ளனர். அவர்களும் ஆண்களைப் போலவே காவலர்களிடம் தங்களை உள்ளே விடும்படி கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் தடுப்புகளை மீறியும் சீமான் வீட்டிற்குச் செல்ல முயற்சித்து வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான பெண் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சீமான் வீட்டின் முன்பு அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்கவும், நாதகவினர் எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் ஆண், மகளிர் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆண் காவலர்களிடம் நாதக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவும் பெண் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆஜராக முடியாது… என்ன செய்வீர்கள்..? போலீசாருக்கு சீமான் ஆவேசச் சவால்..!