மாநில தலைவர் பதவியிலிருந்து விலக அண்ணாமலை முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையைக் காட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தான் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்துள்ள அண்ணாமலையை திருப்தி படுத்துவதற்காக முக்கிய பதவி வழங்க பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வர உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதில் மத்திய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித் ஷா இடையில் சமீபத்தில் நடைபெற்றன. அப்போது தமிழக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலையும் அதிமுகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம், இல்லையென்றால் நான் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் எனக்கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: “அதிமுக வேண்டாம்; அண்ணாமலை தான் வேணும்” - பாஜக தொண்டர்கள் பார்த்த உள்ளடி வேலை...!

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் பொழுது அண்ணாமலை தொடர்ச்சியாக அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதிமுகவுடனோ திமுகவுடனோ கூட்டணி அமைத்தால் அது பாஜகவின் வளர்ச்சியை பாதித்து விடும் என்பதால் தான், மாநில தலைவராக இருக்கக்கூடிய காலம் வரை அதிமுகவுடனோ திமுகவுடனோ பாஜக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று அண்ணாமலை உறுதியாக பேசி வந்தார். இந்த நிலையில் தான் தற்பொழுது 2026 தேர்தல் களத்தை எதிர்கொள்ளக்கூடிய வகையிலே அதிமுக பாஜக கூட்டணி அமைப்பதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவராக வந்த பிறகுதான் கடந்த மூன்று ஆண்டுகளில் பாஜாகா பெரிய அளவில் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றிருக்கின்றது. எனவே அண்ணாமலை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கு ஏதுவாக தன்னுடைய பதவியிலிருந்து விலகிக் கொண்டாலும் கூட, உடனடியாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி, தொடர்ந்து பாஜகவுடனான அந்த தேர்தல் பணியிலே அவரை ஈடுபடுத்துவதற்கு பாஜகவின் தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் சந்திப்பு நடந்த பிறகு அதிமுகா பாஜக கூட்டணி உருவாவதற்கான ஒரு சூழல் கனிந்திருக்கிறது.

அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவரான பிறகுதான் ட்சியினுடைய இமேஜ் பல மடங்குதமிழகத்திலே உயர்ந்திருப்பதாக தேசிய தலைமை கருதுகின்றது. எனவே மூன்று வருடங்களாக பாஜகவின் வளர்ச்சிக்காக உழைத்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து, சட்டப்பேரவை தேர்தலிலும் பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பாஜகவின் தேசிய தலைமை கணக்கிட்டிருக்கின்றது. தமிழக அரசியலில் அண்ணாமலை தொடர்ந்து ஆக்டிவாக இருந்தால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற முடியும் என்பதால் தான் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே டெல்லி தலைமையின் முடிவை ஏற்று அண்ணாமலையும் மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வார் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு..! எங்க தலைவர் அத சொல்லல.. மறுக்கும் சேகர்பாபு..!