025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி, அடுத்த 2 ஆண்டுகளில் தமிழக அரசு 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு என ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதாவது ஒரு மாணவருக்கு ரூ.10 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரத்தில் எப்படி தரமான லேப்டாப் வாங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

நான் நிதி ஒதுக்குவது குறித்து மனக்கணக்கில் சொன்னேன். சற்று கவனக்குறைவாக மனக்கணக்கு போட்டு விட்டேன். மாண்புமிகு அருமை அண்ணன் அவர்களும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் என்னுடைய அன்பான வேண்டுகோளையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்தில் இருந்தபோதும் சரி, அவர் கழகத்தில் இருந்து வெளியேறிய போதும் சரி, தனியாக அதிமுக ஆரம்பித்த போதும் சரி, அவர் மீது பெரும் மதிப்பினை கொண்டவர்கள் நாங்கள்.
இதையும் படிங்க: பிரேமலதாவை ஏமாற்றிய எடப்பாடியாரெல்லாம் எம்.ஜி.ஆரா..? செல்லூர் ராஜுவை நெருக்கும் தேமுதிக..!
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அமர்ந்திருக்கிறாரே நமது முதலமைச்சர். அவரிடத்திலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அன்பினை நேரடியாக கொண்டவர். அவருடைய படம் ஒன்று வெளி வருகிறது என்றால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு என்ன கருத்து என்று மு.கஸ்டாலின் அவர்களிடமே கேட்கக்கூடிய அளவிற்கு கூட உரிமையும், அன்பும் பாராட்டக்கூடிய அவருடைய பிள்ளைகள் நாம்.

அதே போல் நீண்ட காலம் எங்கள் அரசியல் களத்தில் தொடர்ந்து கொண்டிருக்கக்கூடிய நீங்களும், தங்களுடைய தொண்டர்களும் கொள்கையிலே மாறுபட்டு இருந்தாலும், இயக்கப் பற்றின் காரணமாக அவர்களும், அரசியல் களத்தில் களமாட முடியும் என்பதை நாங்கள் மறுக்க முடியவில்லை. ஆனால், அந்த தொண்டர்களோடு ஒரு அரசியல் பயணத்திலே லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்கே இணைந்து பயணித்துக் கொண்டிருக்க கூடிய வேளையில் நீங்கள் கூறிய கணக்கை அண்ணன் தங்கமணி அவர்கள் இங்கே போட்டுக் கொண்டு இருக்க, ஆனால் உங்களுடைய கூட்டல், கழித்தல் கணக்கு எல்லாம் வேறு ஒரு இடத்தில் உட்கார்ந்து இன்னொருவர் போட்டுக் கொண்டு இருக்கிறார் என்படதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

அதுவும் வேறு எங்கே ஒருவர் உட்கார்ந்து உங்களது, தொண்டர்களின் எதிர்காலம், உங்களுடைய அதிமுகவின் எதிர்காலத்தை எல்லாம் காலத்திலேயே நீர்த்துப் போகக்கூடிய அளவிற்கு சாணக்கிய தந்திரத்துடன் இந்த கணக்குகளை சிலர் எங்கோ உட்கார்ந்து கொண்டு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நான் அண்ணன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மடிக்கணினி விவகாரத்தில் சற்று கவனக்குறைவாக நான் இருந்து விட்டதைப் போல, உங்கள் மடியிலே இருக்கக்கூடிய கணத்தை பறிக்க நினைப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்கள் மீது இருக்கக்கூடிய உரிமையின் காரணமாக இங்கே கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சிரிக்கிறார்கள். அப்படியானால் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதுதான் அர்த்தம். அதை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்'' என அரசியல் கணக்குடன் ஒப்பிட்டு சிரிப்பலையை உருவாக்கினார் தங்கம் தென்னரசு.
இதையும் படிங்க: விஜய் சொன்ன 1967, 1977 ரிப்பீட்டு ஆகுமா.? அன்று அண்ணாவும் எம்.ஜி.ஆரும் எப்படி சாதித்தனர்.?