''தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.
விலைமாது வீட்டில் சைவமா வைணவா எனப்பேசியதற்காக கடும் கண்டனங்களை எதிர்க்கொண்டார் அமைச்சர் பொன்முடி. இதனால் கடுப்பான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியின் திமுக துணைச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார்.

''தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் பொன்முடி.

இதையும் படிங்க: பொன்முடியின் ஆபாசப் பேச்சு! தப்பு தப்புதான்... கனிமொழி எம்.பி. கண்டனம்..!
தந்தை பெரியார் விழா பொதுமேடையில் பெண்கள் மத்தியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ''காமச்சுவையை பரப்புவதில், இங்கே மகளிர் எல்லாம் கொஞ்சப்பேர் இருக்குறாங்க. ஆனால் மகளிருக்கே நிறைய பேருக்கு டிக்கெட் கொடுத்தவர் ராமகிருஷ்ணன்.அதில் ஒரு இடத்தில் சொல்லுவோம். (பலமாக சிரித்துக் கொண்டே...) தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் மகளிர். விலைமாதுவின் வீட்டிற்கு ஒருத்தன் போகிறான்.போகும்போது அங்கே அந்த அம்மா கேட்குது.

நீங்க சைவமா? வைணவமா? எனக் கேட்கிறார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் ஏதாவது 5 கொடு கொடு, 10 கொடு எனக்கேட்டால் புரிந்து இருக்கும். என்னடா இங்கே வந்து இந்தப்பெண் சைவமா? வைணவமா எனக் கேட்கிறார்..? எனக்கு ஒண்ணும் புரியவில்லையே எனக் கேட்டான். அதற்கு அந்த விலைமாது சைவம் என்றால் இப்படி..? வைணவம் என்றால் இப்படி என கைகைகளை வைத்து விவரிக்கிறார். அவனுக்கு ஒண்ணும் புரியல.
அந்த விலைமாது சைவம் என்றால் படுத்துக் கொள்வது. வைணவம் என்றால் நின்று கொண்டு செய்வது? நின்று செய்தால் 5... படுத்துக் கொண்டால் 10...'' எனச் சொல்லிவிட்டு பொன்முடி குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். அவரது பேச்சு கடும் விவாதங்களை கிளப்பியது.
இதையும் படிங்க: பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு தயாராகும் தடபுடல் விருந்து...!