புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை 139 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மாநகராட்சி துணை மேயர் லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்: எந்த கட்சியினராக இருந்தாலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் என்று கூறினால் தான் அவர்களது கட்சியினரை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆனால் ஆட்சி மாற்றமும் ஏற்படாது காட்சி மாற்றமும் ஏற்படாது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2026ல் கோட்டையில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கொடியையும் ஏற்றுவார் முதலமைச்சராக பொறுப்பும் வகிப்பார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு கட்சி தமிழகத்தில் இருக்க வேண்டுமா..? திமுகவை விளாசிய நயினார் நாகேந்திரன்!!

பாஜகவின் அடிமைகள் சொல்வதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவது கிடையாது. எங்களின் முதலமைச்சர் மாநில சுயாட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டும். ஒன்றிய அரசு எங்கள் மீது எந்த கருத்தையும் திணிக்க கூடாது. கல்வி சுகாதாரம் போன்றவை எல்லாம் பொதுப் பட்டியலில் இருக்கின்றது. அதனால் எங்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதில் என்ன தவறு. ஒன்றிய அரசின் பட்டியலில் நாங்கள் குறிக்கிடவில்லை. ஆனால் பொதுப் பட்டியல் என்பது எங்களுக்கும் பொதுவான ஒன்று. பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி முடிவெடுக்கும் போது ஒன்றிய அரசு மாநில அரசை கலந்து முடிவெடுக்க வேண்டும். எனவே தான் மாநில சுயாட்சி என்பது அவசியம் தேவைப்படுகிறது என்று வலியுறுத்தப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி மூன்று மாதங்களுக்கு முன்பு பாஜகவோடு கூட்டணி கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறியவர் இன்று வார்த்தையை மாற்றி வருகிறார். எங்களுக்கு பயம் கிடையாது. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கின்றது எங்கள் கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது என்று அவர்கள் தெரிந்து கொண்டனர். அதனால் இது போன்ற வார்த்தைகளை எல்லாம் அவர்கள் உபயோகிக்கின்றனர். 2026ல் எங்களுடைய தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தான் இந்தியா கூட்டணி தான் தமிழ்நாடு சட்டமன்றத்தை பொறுத்தவரை 200 என்ற இலக்கோடு வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்த விஷயத்துல பாஜக மிக கவனமா இருக்கு... இதனாலாதான் கூட்டணி அமைந்தது... திருமா பகீர் தகவல்!!