செய்தியாளர் சந்திப்பில் சீமான் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது. சீமான் இனி நன்றாக இருக்க மாட்டார் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து பதிலளித்துள்ள சீமான், ''எனக்கு முன்னாடியே இதே மாதிரி நாலு, ஐந்து பேரை பண்ணி வந்தாள். அந்த வேலைக்கு பெயர் என்ன சொல்வீர்கள்? பழகுவது, பிறகு வெளியில் போய் வழக்கு தொடுப்பது... மிரட்டி பணம் கேட்பது என்றால் அதற்கு பெயர் என்ன? அதிகபட்சக் கோரிக்கை என்ன? எங்க அண்ணன் வழக்கறிஞர் சந்திரசேகரிடம் போய் அவர் வைத்த கோரிக்கை என்ன? பாவம் அவர் இறந்து போய்விட்டார். அவரிடம் போய் 'மாதாமாதம் முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து என்னை மெயின்டெயின் பண்ணிக்க சொல்லுங்க' எனக் கூறி இருக்கிறார்.

இந்த வார்த்தை எப்படி 'வைப்பாட்டியாக'வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் எனக் கூறி இருக்கிறாள். அடுத்து எங்க அப்பா பாரத்திராஜா என்னிடம், '' டேய் அவ என்ன ஓயாமல் குற்றம் சொல்கிறாள்... அவளுக்கு என்னதான் பிரச்னை? எனக்கேட்டார். ''மாதம் முப்பதாயிரம் கொடுத்து வைப்ப்பாட்டி வைத்துக்கொள்ள சொல்கிறாள். உன் மருமகள் எனக்கு சோற்றில் விஷத்தை வைத்துக் கொன்று விடுவாள். பரவாயில்லையா..?'' என்று கேட்டேன்.
இதையும் படிங்க: சீமானுக்கு பெரிய ரிலீஃப்..! இடைக்கால தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.. விரிவான தகவல்கள்
இதை சொன்னாளா? இல்லையா? என்று அவளிடம் கேளுங்கள். நானும் கண்ணியம் காத்து 15 வருடம் வாயை மூடினேன். ஒரு முடிவுக்கு வந்திருச்சுல்ல. என்னைக்கு மரியாதை கொடுத்தாள். நீங்கள் கண்ணியமாக பேச வேண்டும். என் குடும்பத்தை, என்னை எல்லாம் மரியாதை இல்லாமல் பேசுகிறாள் என்றால், என்னை காதலித்து இருக்கிறேன் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று?

பணத்திற்காக ஒவ்வொரு தடவையும் இடைமறித்து, இடைமறித்து ஆங்கிலத்தில் பிளாக்மெயில் என்று சொல்லுவோமே... இடைமறித்து, இடைமறித்து பணம் பறிக்கும் ஒருத்தருக்கு பெயர் என்ன சொல்லுங்கள். என்னை நீங்கள் எல்லாம் சேர்ந்து பாலியல் குற்றவாளி என்று சொல்வதற்கு காரணம் ஒரு பாலியல் தொழிலாளிக்காக அதை எப்படி ஏற்பது? மானங்கெட்ட நீங்களே பேசினால் தன்மானத்துக்காக போராடுகிற மகன் எப்படி பேச வேண்டும்? மானம் கெட்டால் உயிரைவிடும் கூட்டத்திலிருந்து வந்தவன் நான்.
'என்ஜாய்மென்ட் வித்தவுட் ரெஸ்பான்ஸ்பிள்டி’ என்று உங்களது தலைவர் பெரியார் தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில் தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறாகும்?இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். எல்லாரும் இதற்கு முன்னாடி நீங்கள் சந்தித்த ஆள் எல்லாம் வேற. இப்ப உங்க முன்னாடி நிக்கிற ஆள் வேற. மறுபடி மறுபடியும் சொல்கிறேன்... வரலாற்றிலேயே நீங்கள் இப்போதுதான் சரியான எதிரியை சந்திக்கிறீர்கள். புரிகிறதா... கவனமாக கையாளுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING விஜயலட்சுமி வழக்கில் ஓய்ந்தது தொல்லை... சீமான் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...!