நீலாங்கரையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கே வந்து, ஈரோடு கருங்கல் பாளையத்தை சேர்ந்த போலீசார் சம்மன் அளித்திருக்கிறார்கள். அவரிடம் முதற்கட்டமாக சம்மன் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தலின் போது ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது வெடிகுண்டை வீசுவேன் என்று கூறிய வகையில் ஒரு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறியதன் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள், சீமான் மிரட்டல் தோணியில் சீமான் பேசுகிறார் என புகார் அளித்திருந்தார்கள்.

இந்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது கருங்கல்பாளையத்திலிருந்து ஆய்வாளர் விஜயன் தலைமையான போலீசார் நீலாங்கரையில் இருக்கும் சீமான் வீட்டிற்கு நேரடியாக வந்து சம்மன் வழங்கியிருக்கிறார்கள். இதேபோன்று ஏற்கனவே பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் வடலூரைச் சேர்ந்த காவல்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு தில் இருந்தால் இதைச் செய்ய முடியுமா..? பாஜக- திமுக இடையே சிண்டு முடியும் சீமான்..!

இந்த சம்மன்கள் அனைத்திலுமே நாம் தமிழக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதுதொடர்ந்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருக்கின்றன இது தொடர்பாக எல்லாம் தொடர்ந்து ஒவ்வொரு போலீசாரும் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அது தொடர்பாக சம்மன் என்பது வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்மன்களுக்கு ஆஜராகாத நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கே வந்து போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் ஆலோசிப்பதாகவும் ஒவ்வொரு சம்மனுக்கும் அவர் ஆஜராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஒரே நேரத்தில் எவ்வாறு ஆஜராவது என்ற கேள்வியும் அவர் எழுப்பி இருக்கிறார். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அந்த நீலாங்கரையில் இருக்கும் சீமான் வீட்டுக்கு போது ஒரு பரபரப்பான ஒரு சூழ்நிலை என்பது ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: 'செங்கோட்டையன், எடப்பாடியாரை விட பெரிய கொம்பனா..?' விஜயை விமர்சித்தது ஏன்? - சீமான்