மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய அரசியல் கட்சிகளுக்கு இரண்டு நிலைப்பாடு இருக்கும், காவிரி விவகாரத்திலும், கச்சத்தீவு விவகாரத்தில் மாநில அளவில் ஓர் நிலைப்பாடு, தேசிய அளவில் ஓர் நிலைப்பாடு இருக்கும், சட்டமன்றத்தில் திமுக அரசு கச்சத்தீவுக்கு ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானம் வீண் வெற்றுத் தீர்மானம், கச்சத்தீவு பிரச்சினை எத்தனை ஆண்டுகள் நிழந்து கொண்டு இருந்தது, 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள்.

அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ளது, என்னென்ன செய்தீர்கள் 12 மீனவர்கள் கைது செய்து அழைத்து சென்றனர், பொருளாதர தடை, வர்த்த உறவு, ரத்து செய்தால் இலங்கை பயப்படுவான், ஆனால் ஏன் மறுக்கிறீர்கள், இலங்கை முழுவது சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது, கச்சத்தீவை மீட்க வேண்டாம், மீன்பிடி உரிமையாவது வாங்கிக் கொடுக்க வேண்டாமா? எனக்கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 18 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்..? ஓட்டுக்காக திமுகவின் கபட நாடகம்- சீமான் ஆவேசம்..!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த சட்ட மசோதவிற்கு ஆதரவளிக்காமல் அன்புமணி ராமதாஸ் வெளியேறுவது அதற்கு ஆதரவாக வாக்களித்ததற்குதான் சமம், ஜி.கே வாசன் ஏன் ஆதரவாக வாக்களித்தாத் என தெரியவில்லை. அதிகாரம் எப்போது நிலையானது அல்ல, காங்கிரஸ் கட்சியினர் அப்படி எண்ணினார்கள் ஆனால், தற்போது பல்வேறு மாநிலங்களில் இணை கட்சியாக தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள், பல்வேறு சேர, சோழ சாம்ராஜ்ஜியங்கள் சரிந்து போயிருக்கின்றன என சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், எல்லோரும் கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். கொள்கையில்லாமல் எப்படி வெல்ல முடியும் என கேட்பதில்லை, எனக்கு அது தேவையில்லை, நான்தான் தமிழ்நாடு பெரிய கூட்டணி வைத்துள்ளேன். 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன், மக்களை நம்பி மக்களோடு நிற்கும் பெரிய கூட்டணி, என்னை இழுத்துச் சென்று சாக்கடையில் தள்ளிட்டு முடித்துவிடலாம் என யோசிக்கிறீர்கள், எங்களுக்கான அணி எங்களின் கோட்பாட்டை ஏற்று, தத்துவத்தை ஏற்று பாதை சரியாக் உள்ளது என ஏற்று வரவேண்டும் அப்படியான அணி இந்திய, திராவிட கட்சிகள் இல்லை, அதற்கு எதிராகவே இக் கட்சியை தொடங்கி உள்ளோம், அரசியல் மருத்துவம் கல்வி இப்படி அளிப்போம் என கூறி எங்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வர்கள் இருந்தால் ஆதரிப்போம் என்றார்.
இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சியில் வெட்கக்கேடு இது.. திமுக அரசை புரட்டி எடுத்த சீமான்!!