அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் எதிர் கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என கனிமொழி தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடைபெற்ற ஒரு சம்பவம் எல்லோருக்கும் வருத்தம் தரக்கூடிய ஒன்று , அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் ,எதிர் கட்சிகள் இதை பயன்படுத்திக் கொண்டு அரசியலாக்காமல் அந்தப் பெண்ணின் எதிர்காலத்தை பற்றி ஒரு அக்கறையுடன் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய கனிமொழி சில பேர் அரசியலுக்காக முதல் தகவல் அறிக்கையை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத மிகப்பெரிய குற்றம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அடுத்த கட்டமாக அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் குற்றவாளிக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் எதை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்றும் கனிமொழி தெரிவித்தார்
இதையும் படிங்க: காரணம் சொல்லி சொல்லி ..சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை
இதையும் படிங்க: செருப்பு போடமாட்டேன் ..சாட்டையில் அடித்துக்கொள்வேன் .. திமுகவுக்கு எதிராக அதிரடி காட்டும் அண்ணாமலை