அதிமுகவில் ஜெயலலிதாவின் முக்கிய விசுவாசியாக வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா சிறை சென்ற போது, முதல்வராக ஓ.பன்னீர் செல்வமே நியமிக்கப்பட்டார். பன்னீர் செல்வம் ஜெயலலிதா மறைவிற்கு, பின்னர் அதிமுக இக்கட்டான சூழலில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதிவு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். ஆட்சியை எடப்பாடி நடத்துவதாகவும், கட்சியை ஓபிஎஸ் நடத்துவதாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டதுடன் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். மீண்டும் கட்சியில் இணைய ஓ.பி.எஸ், பாஜக மூலம் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். கடந்த தேர்தலின் போதே அமித்ஷா, ஓ.பி.எஸ்ஸை மீண்டும் கட்சியில் இணைக்குமாறு எடப்படி பழனிசாமியிடன்ம் கோரிக்கை வைத்தார். ஆனால், எடப்பாடி கட்சியில் சேர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் தற்போது வரை உறுதியாகக்கூறி விட்டார்.
இதையும் படிங்க: இதுதான் இறுதி அஸ்திரம்..! இ.பி.எஸுக்கு எதிராக ஓ.பி.எஸ் டீம் போட்ட பகீர் சபதம்- கிளப்புங்கள் வண்டியை...
2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்கிய ஓ.பி.எஸ் தோல்வியை தழுவினார். தற்போது மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி இணைந்துள்ள நிலையில், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டேன் என அமித்ஷா கைவிரித்து விட்டார். இந்நிலையில் பெரியகுளத்தில் பெட்டிப்பாம்பாய் சுருண்டு கிடக்கிறார் ஓ.பி.எஸ்.

விசாரித்தால், கட்சி இணைப்பு விவகாரத்தில் பாஜக டெல்லி தலைமை உதவியுடன் எப்படியும் அதிமுகவுடன் மீண்டும் ஐக்கியமாகி விடலாம் என ஓ.பி.எஸும் அவரது ஆதரவாளர்களும் முழுமையாக நம்பி இருந்தார்கள். ஆனால், அவர்களது ஆசை நிறைவேறாமல் போனதில் கடும் வருத்தத்தில் இருக்கிறார்கள். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என உள்துறை அமைச்சரே கூறியதைக் கேட்டு நிலைகுலைந்து போன ஓ.பி.எஸ் தரப்பு அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

கஷ்டப்பட்டு காலம் கடத்தி அதிமுகவில் போய் இணைவதற்கு பதிலாக, ஏன் பேசாமல் நேரடியாக பாஜகவில் போய் இணையக்கூடாது என யோசித்து முடிவெடுத்தும் விட்டனர். இவர்களின் பல்ஸை அறிந்து கொண்ட பாஜகவும் பேச்சுவாத்தை நடத்தி விட்டது. ஆனால், முக்கிய பதவி வேண்டுமென்ற டிமாண்ட் காரணமாக இணைப்பு தள்ளிப்போகிறது என்கிறர்கள் அவரது ஆதரவாளர்கள்.

இதுகுறித்து பாஜக தரப்பில் பேசியபோது ''அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள், ‘சைலண்ட் மோடில்’ இருப்பவர்களை பாஜகவுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் நயினார் நாகேந்திரனுக்கு கொடுக்கப்பட்ட முதல் ‘அசைன்மென்ட்’. ஆகையால், ஓ.பி.எஸ் நல்ல முடிவை விரைவில் அறிப்பார்' என்கிறார்கள்.
இதையும் படிங்க: ஓடிப்போன பெண்ணுடன் கட்டாயக் கல்யாணம்… மீண்டும் ஓடினால்..? அதற்கும் தயாரான பாஜக..! கடும் விமர்சனம்..!