2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, சாய்பாசா நகரில் நடந்த பிரசாரத்தின்போது, ராகுல் காந்தி பேசுகையில் “ அமித் ஷாவை கொலைகாரர்” எனக் குறிப்பிட்டதாக அவதூறு வழக்கில் மனுதாரர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கீழ்விசாரணை நீதிமன்றம் நடத்திய விசாரணையில், ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது எனத் தெரிவித்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி சார்பில் தொடரப்பட்ட மனுவை ஏற்க ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றமும் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து ராகுல்காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, வழக்கறிஞர் பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில், பிரதிநிதிகள் சார்பில் அளிக்கப்படும் புகாரை அடிப்படையாக வைத்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே 7 தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது என வாதிட்டனர்.
அப்போது மனுதாரரும், பாஜக நிர்வாகி நவீன் ஜா அடுத்த 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா உத்தரவிட்டனர். மனுதாரர் ஜா சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி பதில் மனு தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: மிரட்டி பணம் பறிக்கும் அண்ணாமலை..? டெல்லிக்கு ஹெச்.ராஜா பெயரில் கடிதம்... சிக்கிய காங்கிரஸ் பெண்மணி..?
இதையும் படிங்க: 'திமுக கூட்டணிக்குள் பூகம்பம்... ஸ்டாலின் ஆட்சி மீது கோபம்...' விஜயை கூட்டணிக்கு அழைக்கும் காங்கிரஸ்..!