பிரதமர் ராகுல் காந்தி நாடு முழுவதிலும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி அவர் நினைத்த இடத்திற்கு நேரடியாக சென்று அவர் விரும்பிய தரப்பு மக்களை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம். கும்பமேளா விழாவின்போது சமீபத்தில் டெல்லி ரயில் நிலையத்தில் பயங்கரமான கூட்டல் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். அப்போது நெரிசலில் சிக்கி காயத்துடன் தப்பியவர்களுக்கு அங்கு பணிபுரிந்த போட்டார்கள் விரைந்து சென்று உதவிகளை செய்தனர். அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்து அவர்களுடைய குறைகளை கேட்பதற்காக நேற்று திடீரென்று டெல்லி ரயில் நிலையத்துக்கு ராகுல் காந்தி சென்றார்.

அவரைப் சுமை தூக்கும் தொழிலாளர்கள் (போர்ட்டர்) மகிழ்ச்சி உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களுடன் சுமார் 40 நிமிடங்கள் கலந்துரையாடி அவர்களுடைய பிரச்சனைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்தார். அதன் பிறகு அவர் தன்னுடைய சமூக வலைத்தள எக்ஸ் பதிவில் "பெரும்பாலும் இருண்ட காலங்களில் தான் மனிதநேயத்தின் ஒளி மிகவும் அதிகமாக பிரகாசிக்கிறது" என்று போர்ட்டர்களின் மனிதநேய சேவை பற்றிய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். முன்னதாக சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது குரூப்பில் டி வேலைகள் மற்றும் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை தொழிலாளர்கள் அவருடன் பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "நள்ளிரவில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.. பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு அவமானம்" - ராகுல் காந்தி பாய்ச்சல்

ராகுல் காந்தி தங்கள் குறைகளை கேட்க நேரம் ஒதுக்கியதற்கும் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நம்புவதற்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். ராகுல் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திபேஸ் மீனா என்ற தொழிலாளி ராகுல் காந்தி எம்பி தங்கள் பிரச்சனைகளை மிகவும் கவனமாக கேட்டு தங்களோடு கலந்துரையாடியதாக தெரிவித்தார். அவர் தங்கள் பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதற்கு உதவுவார் என்று உணவு இருந்த தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ராகுல் சுமை தூக்குபவர்களை சந்திக்க ரயில் நிலையத்திற்கு வருவது இது முதல் முறை அல்ல. கடந்த 2023 ஆம் ஆண்டில் அவர் ஆனந்த் விகார் ரயில் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு அவர் சுமை தூக்குபவர்களின் சீருடை அணிந்து கொண்டு அவர்களின் போராட்டங்களை நன்கு புரிந்து கொள்ள தலையில் ஒரு சுமையையும் தூக்கிப் பார்த்தார் என்பது நினைவு கூரத்தக்கது. முன்னதாக வாரத் தொடக்கத்தில் ராகுல் காந்தி தனது மக்களவை தொகுதியான லேபரேலியில் உள்ளூர் மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சந்தித்து பேசினார். கல்வி வேலை வாய்ப்புகள் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து அவர் அப்போது விவாதித்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் கூறுகிறார்.
இதையும் படிங்க: F35 போர்விமானம் கொள்முதல்: பிரதமர் மோடி தன்னிச்சையாக எப்படி முடிவெடுத்தார்? காங்கிரஸ் கேள்வி