கோடை காலத்தில், அதிக வெப்பம் காரணமாக நிலம் வறண்டு போகும் போது, மழை பெய்து அதை சமன் செய்யும். அப்படியாக, கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை குளிர வைத்தது. இந்நிலையில் இனி மழைக்கு வாய்ப்பில்லை என்றும், அடுத்தடுத்த நாட்களில் வெயில் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் பிப்ரவரி மாதத்தில் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. தற்போது, வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்… தமிழகத்தில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு நிலையில் தமிழகத்தில் ஒரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று முதல், 22ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், தமிழகத்தில் ஒரு சில இடங்களில், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகலாம். வரும் 20 வரை வெப்பநிலை உயர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும் என்றும் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியசை ஒட்டி காணப்படும் எனவும் எச்சரித்துள்ளது.மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கிய மக்கள்.. மின்னல் தாக்கி பலியான சோகம்.. கள்ளக்குறிச்சியில் சோகம்..!