அன்புமணி -ராமதாஸ் இடையே மேடையிலேயே மோதல் வெடித்துள்ளதால் பாமகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அடுத்து என்னவாகும் என விழி பிதுங்கி நிற்கும் அவர்களுக்கு யார் பக்கம் செல்வது என்கிற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இன்று பாண்டிச்சேரி, சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாமக 2025 சிறப்பு பொதுக்குழுவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகள் காந்தி பரசுராமனின் மகன் முகுந்தன் பரசுராமனை பாமகவின் இளைஞர் அணித் தலைவராக அறிவித்தார். பரசுராமன் முகுந்தனை அறிவித்த போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

‘‘ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். கட்சித் தலைவர் அன்புமணிக்கு 50 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுத்தர, ஒரு நல்ல இளைஞரான பரசுராமன் முகுந்தனை மாநில இளைஞரணித் தலைவராக அறிவிக்கிறேன். இன்றில் இருந்து அவர் பொறுப்பை ஏற்று, அன்புமணிக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்பார்'’ என்றார் ராமதாஸ்.
இதையும் படிங்க: ராமதாஸ் அன்புமணி வார்த்தை போர் .. நான் சொல்வதை தான் கேட்கணும்... அப்பா மகனிடையே மோதல்
உடனே டென்ஷனான அன்புமணி, ‘‘அவன் கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. அவனுக்கு இளைஞரணித் தலைவர் பதவியைக் கொடுத்தால் எப்படி? அவனுக்கு என்ன தெரியும்? நல்ல அனுபவசாலியான நபரை பதவிக்குக் கொண்டு வாருங்கள். களத்தில் திறமையான ஆட்கள் வேண்டும். கட்சியில் இணைந்தவுடன் பொறுப்பு கொடுத்தால் எப்படி?’’ என காட்டமாக கேட்டார்.
இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத ராமதாஸ், கடும் கோபமாகி, ‘‘யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. வன்னியர் சங்கத்தை நான் தான் உருவாக்கினேன். நான் சொல்வதைக் கேட்காதவர்கள் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. மீண்டும் கூறுகிறேன், மாநில இளைஞரணித் தலைவராக முகுந்தனை நியமிக்கிறேன்’’ என்றார்.
இடையில் புகுந்து பேசிய அன்புமணி, ‘‘குடும்பத்தில் இன்னொருவரா..? சென்னை பனையூரில் மூன்றாவது தெருவில் புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்திருக்கிறேன். அங்கு வந்து எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம்’’ என்றார் கடுப்பாக.

‘‘மீண்டும் கூறுகிறேன். உங்களின் மாநில இளைஞரணித் தலைவர் முகுந்தன். பரசுராமன் முகுந்தன். இன்னொரு அலுவலகத்தை திறந்துகொள், முகுந்தன் உனக்கு உதவியாக இருப்பார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லை என்றால், வேறு என்ன சொல்வது? விருப்பமில்லாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து விலகிக்கொள்ளலாம். இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வத்தைதான் கேட்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் கட்சியை விட்டு வெளியே செல்லலாம்’’ என்றார்.
உடனே மைக்கை வீசி எறிந்து விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார் அன்புமணி. சிறிது நேரத்டில் ராமதாஸும் வெளியேறி காரில் கிளம்பினார்.அவரது காரை சூழந்து கொண்ட அன்புமணி ஆதரவாளர்கள் "அன்புமணி வாழ்க.. வாழ்க.." என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
யார் இந்த பரசுராமன் முகுந்தன்..? பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி -பரசுராமன் தம்பதியினரின் மூன்றாவது மகன் தான் இந்த முகுந்தன்.
பொறியாளரான முகுந்தன், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். தற்போது பாமகவில் ஊடகபேரவை மாநில செயலாளராக இருக்கிறார். முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதவியில் இருந்தார்.

தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் அன்புமணி- ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. முகுந்தன் பரசுராமனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊடக பேரவை மாநில செயலாளராக பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இளைஞரணித் தலைவராக நியமித்துள்ளார் ராமதாஸ் தனது சகோதரி மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உண்மையில் தனது மூத்த மகள் காந்திமதியின் மகனான முகுந்தன் மீது தாத்தாவான ராமதாஸ், மிகுந்த பாசம் கொண்டவர். அன்புமணி பிள்ளைகளை விட முகுந்தன் மீது அலாதியான பாசம் கொண்டவர். ஆகையால் ராமதாஸ் முகுந்தன் முடிவில் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ராமதாஸ் அன்புமணி வார்த்தை போர் .. நான் சொல்வதை தான் கேட்கணும்... அப்பா மகனிடையே மோதல்