சிவகங்கை மாவட்டம் சேர்வாவூரணியை சேர்ந்தவர் மனோஜ். பிரபல ரவுடியான மனோஜ் மீது கொலை கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ரவுடி மனோஜ், நிபந்தனை ஜாமுனில் வெளியே வந்துள்ளார்.

மேலும் இவர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து ரவுடி மனோஜ் அவரது நண்பர்கள் இருவருடன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றுள்ளார்.

அப்போது காரில் சென்ற மர்ம கும்பல் ஒன்று, மனோஜை தடுத்து நிறுத்தி, ஆயுதங்களுடன் வெளியேறி உள்ளனர். இதனைக் கண்ட ரவுடி மனோஜ் சுதாரித்துக்கொணடு அப்பகுதியில் இருந்து ஓட துவங்கியுள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் ரவுடி மனோஜ்-ஐ ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் ரவுடி கொலை.. 2 சிறுவர் உள்பட 6 பேர் கைது..!

இதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மனோஜின் நண்பர்கள் இருவரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் மிதந்த மனோஜின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் நிபுணர்ளின் உதவியுடன் ஆதாரங்கள் சேகரிக்கபட்டு கொலை செய்யபட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தை என்றும் பாராமல் தந்தை செய்த கொடூரம்.. பரபரப்பு வாக்குமூலம்!