அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஹிந்தி மொழி தெரியாததால் தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறாததற்கு காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாகவும், உண்மையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து பாட திட்டத்தில், கல்வி முறையில் மாற்றம் செய்து 2014 ற்கு முன்பு 10.6 சதவித தேர்ச்சியாக இருந்ததை இன்று 4.4 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: இவுங்களுக்கு மனசுல ஜெயலலிதான்னு நினைப்பு.. அதிமுகவை டேமேஜ் ஆக்கிய டிடிவி தினகரன்..!

பாடத்திட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கி கிராம புற மாணவர்கள் UPSC தேர்வை பற்றி யோசிக்க கூட முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது தான் காரணம் இதற்கு காரணம் என்றும் சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு ஹிந்தி தெரியாதது காரணம் இல்லை என்றும் பாஜக ஆட்சிக்கு வந்தது தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

யுபிஎஸ்சி தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு ஏதுவாக இருந்த பாடத்திட்டங்களை மாற்றி CAT தேர்வை போல பல கேள்விகளை வைத்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க உள்ள ஏழை மாணவர்கள் இந்த தீர்வை அணுக முடியாமல் செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மற்ற படிப்புகளை போல யுபிஎஸ்சி தேர்வையும் பணக்காரர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல ஆக்கிவிட்டதாக தெரிவித்தார்.

ஹிந்தி எடுக்காததால் தான் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற வாதம் மக்குத்தனமானது என்றும் தமிழை அடிப்படையாகக் கொண்டு இந்த தேர்வை அணுகியவர்கள் தான் அதிக மதிப்பெண்கள் எடுத்ததாகவும் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: நீங்க ஓட்டுவதற்கு நானும் எடப்பாடியாரும்தான் கிடைச்சோமா..? அண்ணாமலை ஆவேசம்..!