முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.
அன்னூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அவினாசி அத்திகடவு திட்ட குழு சரா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், விழா மேடை மற்றும் பேனர்களில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததாலேயே கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்த கருத்து அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் எதிரிகள் மற்றும் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் எடுபடாது என்றும், துரோகிககள் வாதங்களால் அதிமுகவை சேதப்படுத்த முடியாது என்றும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவமாகத்தான் எடப்பாடி பழனிச்சாமியை பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 'அதிமுகவில் இணைய வேண்டுமா..? 6 மாதங்கள் அமைதியாக இருங்கள்...' - ஓ.பி.எஸுக்கு நிபந்தனை..!
இது குறித்து கோபி அருகே கள்ளிப்பட்டியில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் இனப்பெருக்க தடுப்பு மைய கட்டிடத்தை திறந்து வைக்க வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டபோது ஆர்.பி.உதயகுமார் காலையில் கூறிய கருத்திற்கு தெளிவான விளக்கத்தை மாலை அவரே தெரிவித்துவிட்டார். அதனால் அது குறித்து கூற ஒன்றும் இல்லை என்றார்.

அதே போன்று துரோகிகளால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக நேற்று அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட அத்தானியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் கே.ஏ. செங்கோட்டையன் பேசி இருந்தார்.யார் அந்த துரோகிகள் என செங்கோட்டையனிடம் கேட்டபோது, அந்தியூர் தொகுதியை பொருத்தவரை இதுவரை சேவல் மற்றும் இரட்டை புறா சின்னத்தில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை அதிமுக தோல்வி அடைந்ததற்கு சில பேர் இந்த இயக்கத்திற்கு துரோகத்தை செய்ததால் தான். அதைத்தான் நாம் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினேன. நான் கூறிய அந்த வார்த்தை அந்திநூர் தொகுதிக்கு மட்டும்தான் பொருந்தும் என்றார்.
இரண்டு பொதுக்கூட்டங்களிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை குறிப்பிடவில்லை என்று கேட்ட பொழுது இரண்டு கூட்டத்திலும், நான் எதிர்க்கட்சித் தலைவர்,பொதுச் செயலாளர் என்று கூறியிருக்கிறேன் என்று கூறிவிட்டு நழுவி சென்றார்.
இதையும் படிங்க: தொடரும் இலாகா பறிப்பு... திமுக ஆட்சியில் அதிக முறை பந்தாடப்பட்ட ராஜகண்ணப்பன்...!