திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழியின் மூத்த மகன், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் ப. தர்மலிங்கத்தின் பேரன் அன்ம்பில் மகேஷ் பொய்யாமொழி. திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் நண்பர். இரு குடும்பங்களுக்கு இடையே நட்பு பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. அந்த நட்பு தாத்தா அன்பில் பி.தர்மலிங்கம், மு. கருணாநிதி காலம் தொடங்கி, தந்தையர் அன்பில் பொய்யாமொழி- மு.க.ஸ்டாலின் என நீடித்து இப்போது மகன்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக அறியப்படுகிறது.

இரு குடும்பத்தினரும் அரசியலிலும் அப்படியே... மூன்று தலைமுறைகளாக கலைஞர் குடும்பத்திற்கும் சினிமாவுக்கும் பந்தம் உண்டு. ஆனால், பொய்யாமொழி குடும்பத்திற்கு இல்லாதிருந்த கலை உணர்வை மூன்றாம் தலை நபராக அன்பில் மகேஷ் பொய்யமொழி, உதயநிதி மூலம் வாய்க்கப்பெற்று இருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.
இதையும் படிங்க: ஒத்தை ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. தேதியை, நேரத்தை கூறுங்கள்.. உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை...!

இப்போது விளையாட்டு துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருகும் உதயநிதியை போலவே அவரது தந்தை மு.க.ஸ்டாலினும் இளம்பருவத்தில் சினிமா, சீரியல் என்று நடித்துவிட்டு பிறகு முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு இப்போது முதல்வராக இருக்கிறார். உதயநிதியின் நண்பரான அன்பில் மகேஷ் இளம் வயதில் சீரியலில் நடித்துவிட்டுத்தான் இப்போது அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறியாத தகவல்.
ஆனால், கலையுலகில் உதயநிதிக்கு சீனியர் அன்பில் மகேஷ்! உதயநிதி 'ஒரு கல் கண்ணாடி' படத்தில் ஹீரோவாக சினிமாவில் நடிப்பதற்கு முன்பே அவரது நண்பர் அன்பில் மகேஷ் சீரியல் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இதுவரை அதனை பலரும் அறிந்ததில்லை. ஆனால் அன்பில் மகேஷ் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்ட பின்பு அவரது சீரியல் புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. சன் டிவியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அகல்யா என்ற சீரியலில் ஏ.பி.நல்ல முத்து என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார் அன்பில் மகேஷ். அந்த சீரியலில் அன்பில் மகேஷ் நடித்தது ஒரே ஒரு காட்சியில் மட்டும்தான். ஒரு வீல்சேரில் உட்கார்ந்து சுற்றியபடியே 'ஹலோ...' என ஒற்றை வார்த்தை டயலாக் மட்டும்தான்
ஆனால் அகல்யா தொடர் ஒளிபரப்பாகும் எபிசோடு முழுவதும் அவர் நடித்த காட்சி இடம்பெற்று இருந்ததற்கு காரணம் உதயநிதி மட்டுமே.. எப்படி? சீரியலில் தினமும் போடப்படும் டைட்டில் சாங் பாடல் காட்சிகளில் அன்பில் மகேஷ் காட்சிகளும் இடம் பிடித்திருந்தது.

''தயாநிதி மாறன், '' உன்னுடைய நண்பன் என்பதால் அன்பில் மகேஷ் காட்சியை மட்டும் தினமும் போடுவியா..? அவன் நடிச்சதே ஒரே ஒரு காட்சி. அது தினமும் வரணுமா? என்று உதயநிதியை கலாய்த்ததாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தைரியம் இருக்கா..? அண்ணாசாலை பக்கம் வா அண்ணாமலை...' உஷ்ணமாகிய உதயநிதி..!