''விஜய் அவர்களே உங்கள் படத்திற்கு பல மொழி தேவை... குழந்தைகளின் பாடத்திற்கு பல மொழி தேவையில்லையா?'' என பாஜக மூத்த் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''ஆதவ் அர்ஜுனா கருத்துக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், தம்பி விஜய் வந்து ஒரு கட்சி தலைவர் என்ற முறையில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்ற முறையில் பேசியது வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் எதிரில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சரி, எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி. கட்சியிலே அடிப்படையிலேயே மக்கள் பணியாற்றி மிகத் தீவிரமாக பணியாற்றித்தான் அவர்கள் முன்னால் வந்தார்கள். இன்றைக்கு நீங்களே ஒரு கற்பனை செய்து கொண்டு இருக்கிறீர்கள். கொள்கை கட்சி என்றெல்லாம் சொல்கிறார். இதெல்லாம் தவறு விஜய் அவர்களே. திமுகவின் எதிர்ப்பை தீவிரப்படுத்துங்கள்.
இதையும் படிங்க: முதல்வருக்கு அது நடந்துடுமோன்னு பயம்... திமுகவை டரியல் ஆக்கிய தமிழிசை...!

சினிமாவில் எல்லாம் ஒரு பாட்டு சீன் வைத்துக் கொள்ளலாம். ஒரு பைட் சீன் வைத்துக் கொள்ளலாம். ஒரு எதிர்ப்பு சீன் வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்வது போல் நாம் இந்தியை பற்றி கொஞ்சம் பேசிவிடுவோம். இரு மொழிக் கொள்கையை பேசி விடுவோம். தம்பி விஜய் அவர்களே அந்த காலத்தில் உள்ள நடிகர் படங்கள் தமிழ் நாட்டுக்குள்ளே இருந்தது. இன்றைக்கு உங்கள் படமே தெலுங்கானாவில் ஓஹோ என்று ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
தெலுங்கில் டப்பிங் செய்கிறார்கள். சில இடங்களில் தெலுங்கில் பேசியிருக்கிறார். அப்படியானால் விரிவு படுத்ததப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு பழமொழிகள் தேவைப்படும்போது இதே போல விரிவுபடுத்தப்பட்ட சவால்களில் குழந்தைகளுக்கு மும்மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் படத்திற்கு பழமொழி வேண்டும். பாடத்திற்கு பழமொழி வேண்டாம் என்று சொன்னால் எப்படி? திமுக இரு மொழி என்று சொல்கிறது. வக்பு திருத்த மசோதா என்பது பாமர இஸ்லாமியர்களின் இடத்தைக்கூட திருப்பிக் கொடுப்பதற்கானது. அதிலும் திமுகவினர் எதிர்ப்பு சொல்கிறார்களே... நாமளும் எதிர்ப்பு சொல்லி விடுவோம் என்கிறீர்கள். தமிழகத்தில் பல நகராட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், பஞ்சாயத்துகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கீழே தள்ளிவிட்டு சாமானிய மக்கள் சின்னம் இல்லாமல் போட்டி போடுகிறார்கள். உங்களுடைய மறுவரையறையை என்ன சொல்வது?

அப்படியானால் தம்பி விஜய் அவர்களே திமுகவுக்கும்- தவெகவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? நீங்கள் எங்களை 'பி' டீம் என்கிறீர்கள். நீங்கள்தான் திமுகவின் 'பி' டீம் என்று எங்களால் சொல்ல முடியாதா? புதிதாக எதையும் நீங்கள் சொல்லவில்லையே.
ஒரு தெளிவற்ற தன்மைதான் உங்களிடம் இருக்கிறது. பரந்தூர் வேண்டாம் என்கிறார். நான் கேட்கிறேன் உங்களுக்கு பனையூர் வேண்டும். நீங்கள் என் வீட்டுக்கு பக்கத்தில் தான் சின்ன வீட்டில் இருந்தீர்கள். எனக்கு நல்லா தெரியும் சாலிகிராமத்தில். உங்கள் வாழ்க்கை விரிவடைய உங்களுக்கு பனையூர் தேவைப்படுகிறது. தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைய பரந்தூர் தேவைப்படுகிறது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெட்கமில்லையா..? காவிரி, முல்லைப்பிரச்னையை தீர்க்க ஏதாவது கூட்டம் போட்டீர்களா.? அண்ணாமலை ஆவேசம்