இது தொடர்பாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், செந்தில் பாலாஜி இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே செந்தில் பாலாஜி மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி… HC-யிலும் உள்குத்து… வெடிக்கும் சமூக ஆர்வலர்..!

ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிரிப்பலையில் மூழ்கிய சட்டப்பேரவை... சபாநாயகரின் பேச்சால் சுவாரஸ்யமான விவாதம்!!