தெலங்கானா மாநிலம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்றும் இதனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறார் முதல்வர் ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மாநில அரசு கடுமையான நிதி அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும், ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தெலுங்கானாவின் நிதி மேலாண்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தெலுங்கானா எதிர்கட்சிகள் இந்த நெருக்கடிக்கு ஆளும் காங்கிரஸ் அரசின் கொள்கைகளை குற்றம் சாட்டுகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தில் மோசமடைந்து வரும் நிதி நிலைமை தெலுங்கானாவின் வருவாய் அதிகரிக்க முடியாமல் பலவீனமடைந்து உள்ளது. இதனால், ''அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அரசு தீர்வுகளை நோக்கிச் செயல்பட்டு வருவதாக'' அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதி அளித்தாலும், அவரது கருத்துக்கள் மாநில நிதிகளில் அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்தை எடுத்துக்காட்டுகின்றன
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்

தெலுங்கானாவின் நிலைமை இமாச்சலப் பிரதேசத்துக்கு இணையாக உள்ளது. அங்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசு நிதி நெருகடிகளா போராடடிருகிறது. வருவாய் திட்டமிடல் இல்லாத காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகள், மக்கள் நலத் திட்டங்கள், மாநிலங்களை கடன் பொறிகளில் தள்ளிவிட்டதாகவும், சம்பளம் கொடுப்பனவுகள் போன்ற அடிப்படை செலவுகள் ஒரு சவாலாக மாற்றி உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தெலுங்கானா அரசு தனது பட்ஜெட்டை மறுசீரமைக்க வேண்டி இருக்கலாம். தேவையற்ற செலவினங்களைக் குறைக்க வேண்டி இருக்கலாம் அல்லது மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி உதவியைப் பெற வேண்டி இருக்கலாம். சம்பள தாமதங்கள் அடிக்கடி ஏற்பட்டால், நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் பட்சத்தில், ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சரை நேரில் சந்தித்த திமுக தூதுக்குழு.. தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு..!