நடிகை மாளவிகா மோகனன் இந்த முறை தன்னுடைய புத்தாண்டை, வெளிநாட்டில் தன்னுடைய தோழிகளுடன் கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்களை தாமதமாக வெளியிட்டுள்ளதால் பிளேட்டட் வாழ்த்துக்களை தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

மாளவிகா மோகனன் நடிப்பில் கடைசியாக தமிழில் 'தங்கலான்' திரைப்படம் வெளியானது.

நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை, பா ரஞ்சித் இயக்கி இருந்தார். மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் எதிர்பார்ப்போடு வெளியானாலும் படு தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: அல்ட்ரா மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்!
அடுத்தடுத்து தமிழ் சினிமா மாளவிகா மோகனனுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தாலும், தன்னுடைய திறமையை நிரூபிக்க போராடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரின் கைவசம், 'சர்தார் 2' திரைப்படம் உள்ளது.

இதை தொடர்ந்து, பிரபாஸ் நடிக்கும் 'ராஜ சாப்' படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய புத்தாண்டு விடுமுறையை தோழிகளுடன் கொண்டாடியுளளார் மாளவிகா மோகனன். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கைவிட்ட பிக்பாஸ்! மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்த தர்ஷா குப்தா - சும்மா சுர்ருன்னு ஈர்க்கும் போட்டோஸ்!