தன்னுடைய முதல் அரசியல் அடியை நடிகர் விஜய் எடுத்துவைத்த நேரம் அது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே, திருநெல்வேலியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜய், அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமானதாக இருக்கும். தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என விஜய் நினைத்திருக்கலாம்” என வாயார வாழ்த்தி விஜய்யை வரவேற்றார். 
விஜய்யும் சீமானும் அடிக்கடி சந்தித்து ஆலோசிப்பதாகத் தகவல்கள் பரவியபோது, “அண்ணனும் தம்பியும் சந்திப்பது வழக்கம்தானே... அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்துக்கொள்கிறோம்” எனப் புன்னகையோடு சொல்லிவந்தார் சீமான். ஆனால் விஜய் மாநாடு நடத்திய இரண்டாவது நாளே அண்ணன் என்ன? தம்பி என்ன? என முறுக்கிக் கொண்டு விஜயை கடுமையா விமர்சித்து வருகிறார் சீமான். நாம் தமிழர் கட்சியில் இருந்து கொத்துக் கொத்தாக விலகி தவெகவில் தொண்டர்கள் சேர்ந்து வருவதால் சீமானுக்கு விஜய் பரம எதிரியாகவே மாறிப்போனார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் விலக, காற்று பிடுங்கிய டயர் போல தொண்டர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சீமானின் தம்பிகள் கூண்டோடு விலகினார்கள். அவர்கள் அனைவரும் திடீரென தவெக கட்சியில் ஐக்கியம் ஆனார்கள். இதற்காக கடந்த வாரம் அந்த ஏரியாவில் இணைப்பு விழாவும் நடந்தது.

இதையும் படிங்க: 100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்
இதில், 200 பேர் வரை இணைந்து, கட்சியோட துண்டு, அடையாள அட்டைகளை பெற்று தவெகவில் தஞ்சமடைந்தனர். சீமான் கட்சியில் இருந்தபோது வட்டம், மாவட்டம் என பெரிய பொறுப்புகளில் இருந்துள்ளனர். ஆனல் இப்போது விஜய் கட்சியில் வெறும் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்.
பெரிய பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து சென்ற இடத்தில் தம்பிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ போகிறாய் ஞானத் தங்கமே..!
இதையும் படிங்க: பாஜகவின் விசிக கரிசனம்... அடியெடுத்து வைக்கிற இடமெல்லாம் கேட் போடும் தலைவர்கள்..? கருவேப்பிலையான ஆதவ் அர்ஜூனா..!