11ம் தேதி காலை ஐடிசி சோழா நடசத்திர ஹோட்டலில் எடப்பாடி பழனிசாமிக்காக காத்திருந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அப்போது எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான விருப்ப மனு பெற கால அவகாசம் 4 மணியோடு முடிவடைந்த பிறகே அமித் ஷாவை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதை நேரடியாக அமித் ஷாவிடம் சொன்னால் அவர் கோபப்படுவார் என நினைத்த பாஜக நிர்வாகிகள், ‘அவர் நல்ல நேரம் பார்க்கிறார், பங்குனி உத்திரப் பூஜையில் இருக்கிறார்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்குள் நாம் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துவிடலாம் என்று அலோசனையும் சொல்லி இருக்கிறார்கள்.

இதனால்தான் பத்திரிகையாளர் சந்திப்பு அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது. அமித் ஷா மயிலாப்பூரில் இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்றார். அங்கே அமித் ஷா, அண்ணாமலை, எல்.முருகன் மேலிட பொறுப்பாளர்கள் உடன் சென்றனர். அவர்களிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார் அமித் ஷா.
இதையும் படிங்க: தலையாட்டி பொம்மை யோக்கியதை.. முதல்வர் சொன்னா கோபம் வருதோ.? இபிஎஸ்-ஐ கதறவிடும் அமைச்சர் ரகுபதி!
அப்போது ’எடப்பாடி ஏன் இன்னும் வரவில்லை?’ என்று கேட்டுள்ளார் அமித் ஷா. அப்போதுதான், ‘எடப்பாடி சில நிபந்தனைகளை விதிக்கிறார்’ என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி, அமித் ஷாவிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அதன்பிறகு அண்ணாமலை, முருகன் உள்ளிட்டோரை வெளியே அனுப்பிவிட்டு அமித் ஷாவும், ஆடிட்டர் குருமூர்த்தியும் மட்டும் ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வீடியோ காலில் அழைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை நேரில் சந்திப்பதற்கு முன்பே இந்த வீடியோ கால் மூலம் சந்தித்துவிட்டார்.
வீடியோ காலில், ஆடிட்டர் குருமூர்த்தியிடம் எடப்பாடி ஏற்கனவே தான் வைத்த நிபந்தனைகளை கூறி இருக்கிறார். அதாவது தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு இடமில்லை என்பதைச் சொல்லி இருக்கிறார். அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி ‘உங்க கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். எங்களை நீங்க நம்பலாம்’ என்று சொல்ல அதனை அமித் ஷாவும் ஆமோதித்து இருக்கிறார்.

அப்போது ’நயினார் நாகேந்திரனை மட்டும்தான் மாநில தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க சொல்லி இருக்கோம். அவர் மட்டும்தான் நாமினேஷன் செய்வார். உங்களுக்கு இணக்கமான தலைவர்தான் வரப்போகிறார்’ என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறி இருக்கிறார்.
இந்த வீடியோ காலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தன் வீட்டில் முக்கிய தலைவர்களான கே.பி.முனுசாமி, வேலுமணி, உதயகுமார் உள்ளிட்டோரோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
அமித் ஷா ரொம்ப கனிவாக பேசுகிறார். நம்ம கட்சி விஷயத்தில் தலையிட மாட்டோம் எனச் சொல்கிறார் எனத் தெரிவித்து விட்டு 4 மணிக்கு வேட்பு மனு தாக்கல் முடிந்து, 4.36 மணிக்கு அமித் ஷா ட்விட் போட்ட பின்பே தனது வீட்டில் இருந்து ஹோட்டலுக்குப் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க: அமித் ஷா கேட்ட 2 கேள்விதான்… பெட்டிப் பாம்பாய் அடங்கிப்போன எடப்பாடியார்..!