சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மார்ச் 1 என்னுடைய பிறந்தநாள் மார்ச் 8 உலக மகளிர் நாள் மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. இதே மார்ச் மாதத்தில் பிறந்தவன் என்பதை நினைத்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். சமூகத்தின் சரிபாதியான மகளிருக்கான நாள் இது. தாய் இல்லாமல் நான் இல்லைன்னு சொல்லத்தக்க வகையில், பெண்கள் இல்லாம ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்த ஆண்கள் நாங்கள் என்பதால உங்களோடு சேர்ந்து உலக மகளிர் விழாவில் கலந்து கொண்டிருக்கிறோம்.

திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை நோக்கமே இரத்த பேதம் இல்லை, பாலின பேதம் இல்லை என்பதுதான். அதுவே முழுமையான சமூக நீதி, திராவிட இயக்கத்தை உருவாக்கிய பகுத்தறிவிப்பாளர் தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் எல்லாம் பெண் விடுதலைக்காக உழைத்தார். மனித வர்க்கத்திடம் பெண்ணை அடிமையாக்க நினைக்கிற எண்ணம் ஒழிய வேண்டும் என்றார். அதனால் தான் திராவிட இயக்க ஆட்சி காலங்களில் பெண்களுக்கு உரிமைகள் மீட்டுத் தரப்பட்டது. திராவிட இயக்கத்துக்கு ஆதிவிதையான நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை தரப்பட்டது.

பெரியார் வழித்தடத்தில் வந்த பேரறிஞர் அண்ணா சுயமரியாதை திருமணத்தை சட்டமாக நிறைவேற்றினார். பெரியார் போட்ட தீர்மானத்தை சட்டமாக்கி சொத்துரிமை தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் மேலும் காவல்துறையில் மகளிர் மகளிர் சுய உதவி குழுக்கள் மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகள் 33 விழுக்காடு இட ஒதுக்கீடுன்னு பல முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார். நம்ம திராவிட மாடல் ஆட்சியில் புதுமைப் பெண் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் சுய உதவி குழு, மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சருடைய காலை உணவு திட்டங்களில் பங்கு பெற வச்சிருக்கிறோம்.

இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்த அரசாங்கம் அதிமுக தான்..! ஜெ.விற்கு கிரீடம் சூட்டிய இபிஎஸ்..!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணங்களை தடுத்து அவங்களை பாதுகாக்க பாலியல் வளமையங்கள், உள்ளாட்சியில் பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக உயர்த்த 50 விழுக்காடு ஒதுக்கீடு, பெண்கள் பாதுகாப்பா தங்கி பணிபுரிய தோழி விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலமாக நான் அறிவிக்க விரும்புவது, புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில் 700 படுக்கைகளோடு புதிய தொழில் விடுதிகள் அமைக்கப்படும். அதில் 24 மணி ரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைபை வசதி, ஆர்.ஓர் முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பல வசதிகளோடு அதை அமைக்க இருக்கிறோம் என அறிவித்தார்.
இதையும் படிங்க: நதிகளுக்கு பெண்கள் பேர் வெச்சா போதுமா..? மரியாதை கொடுக்கணும்பா... அன்புமணி அறிக்கை..!