மதுரையில் ‘கம்பர் 2025 - கல்விக்கூடங்களில் கம்பர்’ எனும் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ளின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். “பிகாரில் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனது சிறு வயதில் கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பர் பிறந்த இடத்தையும், அவர் ராமாயணத்தை அரங்கேற்றிய இடத்தையும், அவர் மறைந்த இடத்தையும் பார்க்க வேண்டும் என கனவு கண்டேன். அந்த கனவு இன்று நிறைவேறிவிட்டது. கம்பன் பிறந்த திருவழுந்தூர் கம்பன் மேட்டுக்கு மார்ச் 31-ம் தேதி செல்லும் பாக்கியம் கிடைத்தது. அதேபோல், நாட்டரசன்கோட்டையில் கம்பர் சமாதி அடைந்த இடத்தில் தரிசனம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.

கம்பராமாயணம் தமிழர்களின் நன்மதிப்புகளை விழுமியங்களை சமுதாயப்போக்கை எடுத்துக் காட்டுகிறது. ஒரு தனிமனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. கம்பன் பெண்களை போற்றும் கலாச்சாரத்தை நமக்கு அளித்துள்ளார். ஆனால், சில தினங்களுக்கு முன் ஆளுங்கட்சியைச சேர்ந்த ஒரு நபர் பெண்களை எவ்வளவு தரக்குறைவாக பேசமுடியுமோ அந்தளவுக்கு கீழ்த்தரமாக விவரித்திருந்தார். ராவணன் தூக்கிச் சென்றக் காட்சியை கூட கம்பன் கண்ணியமாக கூறியிருந்தார். ஆனால், அந்த அமைச்சரின் பேச்சுகள் கண்டனத்திற்குரியது. அவருடைய பேச்சுகளில் விமர்சனங்களை பார்க்கிறோம். இதில் இருக்கும் ஆபத்துகளை நாம் உணர வேண்டும். இதன் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தின் நன்மதிப்புகள், கண்ணியமான பாதையை, நாம் அழித்து வருகிறோம், மறந்து வருகிறோம். இதை நினைவூட்டுகின்றேன். அப்படிப்பட்ட நபரை நான் கனவான் என கூப்பிடும் கட்டாயத்தில் உள்ளோம்.
அப்படிப் பேசியவர் பெண்களை மட்டும் அவமதிக்கவில்லை, பெண்களின் கண்ணியத்திற்கு மட்டும் சேதம் விளைவிக்கவில்லை. சிவன், விஷ்ணுவை வழிபடுவோரையும் அவர்களது பக்தியையும், அவர்களது உள்ளத்தின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டு தெய்வ மரபுகளை சேதப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் பக்தி மணம் கமழாத இடமே இல்லை. அத்தகைய தமிழக மண்ணில் தெய்வ வழிபாட்டாளர்களை புண்படுத்தியிருக்கும் செயலை அரங்கேறியிருக்கின்றனர்.

அப்படிப் பேசியவர் தனி நபர் அல்ல, தமிழகத்தில் சுமார் 75 ஆண்டுகளாக நிலவிவரும் சூழல் அமைப்பில் அவர் ஒரு சிறுபுள்ளிதான். அவர் மூலம் தமிழகத்தில் அரசியல் ரீதியாக கலாச்சார படுகொலைகள் அரங்கேறியிருக்கிறது. அந்த அமைப்பினரால் தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுக்கு ஒப்பிட்டு பேசியதன் ஒருபகுதிதான் இச்செயல். தமிழகத்தில் நிலவிவரும் கலாச்சாரம், விழுமியங்களை அவமதிப்பு செய்கின்றனர்.
இதையும் படிங்க: திமுக வைத்த துரோக கூட்டணிகள்… குல்லுகபட்டர் முதல் லீலாவதி போட்டோ வரை..!
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவரும் தமிழ்க் கலாச்சாரம் அடையாளத்தை அழித்தொழிக்கின்றனர். பெண்களையும், சைவ, வைணவ மதத்தையும், சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதன் மூலம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
நாம் என்ன செய்யு முடியும். நம்மால் என்ன செய்ய முடியும் என்றிருக்கக்கூடாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியாளர்கள் அடக்குமுறை அராஜகத்தில் ஈடுபடும்போது மக்கள் சமுதாயம் விழித்து செயல்பட்டதுபோல் விழிப்போடு செயல்பட வேண்டும்.

வழிபாட்டுதலங்கள், ஆலயங்கள், விழுமியங்களை அழிக்க முனைந்தபோது ஆட்சியாளர்கள் எதிர்த்துக் கேட்கத் தவறியபோது மக்கள் எதிர்த்து போராடினார்கள். அதைப்போலவே தமிழர்களின் அடையாளங்கள், கலாச்சாரத்திற்கு தற்போது சிதைவு நடக்கும்போது எதிர்க்கும் பொறுப்பை முன்னோர்ர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். " என்று ஆர்.என். ரவி பேசினார்.
இதையும் படிங்க: தலையாட்டி பொம்மை யோக்கியதை.. முதல்வர் சொன்னா கோபம் வருதோ.? இபிஎஸ்-ஐ கதறவிடும் அமைச்சர் ரகுபதி!