வடமாநிலத்தைப் போலவே மதப்பிரச்சனையை உருவாக்கி பகுத்தறிவை கெடுத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதால், இந்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது..ஆம் ஆத்மி பின்னடைவு ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால் அது தேசத்திற்கான தேர்தல் பின்னடைவு என கருத வேண்டி இருக்கிறது என்றார். இந்திய கூட்டணி கட்சிகள் ஈகோவை ஓரமாக வைத்துவிட்டு, நாட்டு மக்களின் நலனுக்காக சிந்திக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், டெல்லி தேர்தலை படிப்பினையாக கொண்டு காங்கிரஸ் கட்சி திரிணாமுல் மற்றும் ஆம் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் பாஜக மாபெரும் எழுச்சி..! இந்தியா கூட்டணி மீது திருமாவளவன் அதிர்ச்சி..!

தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கமின்றி மோதல் உருவாகும் நிலை? திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். மக்களுக்கு எதிராக இந்து சமூகம் வட மாநிலத்தில் மதப் பிரச்சினையை உருவாக்கி பகுத்தறிவை கெடுத்து அரசியல் ஆதாயம் தேடுவார்கள். இந்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத பாஜகவினர் இப்போது எதற்காக கொடுக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

மதுரை மாவட்ட நிர்வாகம் திருப்பரங்குன்ற விவகாரத்தை சரியாக கையாளவில்லை? திருப்பரங்குன்றத்தில் மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை. நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம் என்றார்.
தமிழகத்திற்கான புதிய கல்வி கொள்கை நிதி பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பு?
இந்த முறை பீகாருக்கும் ஆந்திராவிக்கும் தான் அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளார்கள். பாஜக அல்லாத மாநிலங்களையும் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்… ஓரணியில் திரண்ட திமுக கூட்டணிக் கட்சிகள்..! 'பலியாடாகும்' மாவட்ட ஆட்சியர் சங்கீதா..!