திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தமிழக அரசியலின் புதிய விவாதமாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும் என்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு, மதுரையில் குவிந்தவர்கள் இந்து அமைப்பினர் என்று சொல்லக் கூடாது. அவர்கள் பாஜகவினர் தான் என்று தெரிவித்தார். அதேபோல் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,, ''அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருப்பரங்குன்றத்தின் சரித்திரம் தெரியுமா? 1926ல் இதே பிரச்சனை வந்த போது, திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை முழுமையாக கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.அப்போது மேல்முறையீடு சென்ற போது, இருவரும் சமாதானமாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1931ல், சப் ஆர்டினேட் நீதிபதி கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். முழுமையாக கோயிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வந்த பின், பிரச்சனை முடிந்துவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக காத்த கோயிலை, இன்று திராவிட கும்பல் குறிப்பாக திமுக கொடுப்பதற்கு தயாராக இருப்பது வேடிக்கையாக உள்ளது. இதனால் சேகர்பாபு பேசுவதற்கு முன்பாக 1931 ப்ரிவி கவுன்சில் தீர்ப்பை படிக்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாகி விட்டது.. திமுக அரசு மீது பாயும் பாஜக தலைவர் அண்ணாமலை...

இன்று புதிதாக இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் பிரச்சனையை தொடங்குகிறார்கள். அங்கு சென்று சாப்பிடுகிறார்கள். எம்பி நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லை. ஆனால் சேகர்பாபு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். அமைச்சர் ரகுபதி, இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார். அமைச்சர் ரகுபதி அவர்கள் வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும். இன்னைக்கு அமைச்சராகவோ, எம்எல்ஏவாகவோ இருக்கலாம். எத்தனை நாளைக்கு இருப்பீர்கள். நாளை காலை அமைச்சராக இருந்து விடுவீர்களா? ஆகவே, எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ இருப்பதால் அப்படி பேசக்கூடாது. உங்களை எப்படி அடக்க வேண்டும் என்று எங்களுக்கும் தெரியும். நாங்களும் அதை செய்து காட்டுவோம். மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக தான் நாங்கள் மரியாதை கொடுக்கிறோம். பேசுகின்ற வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும்.
இரும்பு கரம் கொண்டு அடக்குவதாக சொல்கிறீர்கள். முருக பக்தர்கள் என்ன தவறு செய்தார்கள்? கஞ்சா வித்தவர்களா? இவர்களெல்லாம் பெண்கள் மீது கை வைத்தார்களா ? முருக பக்தர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்குவீர்கள். அவர்கள் என தவறானவர்களா? தமிழகத்தை பற்றி லோக்சபாவில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார்கள். எந்த அளவுக்கு தமிழகத்தில் கஞ்சா பழக்கம் அதிகமாக இருக்கிறது? அதை நான் படிக்கிறேன். அதில் கவனம் கொடுங்கள். 2021 இல் தமிழ்நாட்டில் என்டிபிஎஸ் 9432 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இதே 2022 ல் திமுக ஆட்சியின் போது 588, பேர் மீதும், 2023-ல் 423, பேர் மீதும், 2024ல் 113 மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெட்கமாக இல்லையா? திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மொத்தமாக பதியப்பட்ட வழக்கு 1422, இன்றைக்கு கஞ்சாவின் தலை நகரமாக தமிழகம் இருக்கிறது என்பதிலேயே தெரிகிறது. இதுதான் உங்கள் லட்சனமா? கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்கு போலீஸ்காரர்களை பயன்படுத்த வேண்டுமா? அல்லது நியாயமாக போராடும் 350 பாஜகவினர் வீட்டிற்கு முன் நான் கைது செய்வேன் எனப்போய் மிரட்டுவதா? இதில் வீர வசனம் வேறு. அமைச்சர் சேகர்பாபு, ரகுபதி போன்றவர்கள் வெட்கமே இல்லாமல் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று சொல்கிறார்கள்.
எங்களுக்கும் தெரியும் உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது. பொறுத்துக் கொண்டிருக்கிறோம். தார்மீக ரீதியாக கோர்ட்டில் அனுமதி கொடுத்து அதன்படி இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மறுபடியும் இரும்புக்கரம் என்று வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டுவீர்கள் என்றால் ரகுபதி இருக்கிற இடம் அவருக்கே தெரியாது. மிரட்டுகிற உருட்டுகிற வேலையெல்லாம் திமுக கரை கட்டி திரிபவர்களிடமும், இன்பநிதிக்கு போஸ்டர் அடிப்பவரிடமும் வைத்துக் கொள்ளுங்கள். அற வழியில் போராடியவர்கள் முருக பக்தர்கள். அத்தனை பேர் இருந்தார்கள் பஸ்ஸை உடைத்தார்களா? அமைதியான முறையில் இருந்து அமைதியாக பேசிச் சென்று இருக்கிறார்கள். இன்று தமிழகத்தில் பிரச்சனைகளை உருவாக்குவது யார்? திமுககாரர்கள்'' என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... எங்கள சீண்டாதீங்க... கொதித்தெழுந்த அண்ணாமலை!