கோமியம் குடித்தால் ஜுரம் நீங்கும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசிய வீடியோ தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி ஐஐடி இயக்குநர், ளுநர் போல மாறிவிட்டார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ''அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தபோது ஒரு சந்நியாசி கூறியதாக கோமியத்தை குடித்ததால், 15 நிமிடங்களில் ஜுரம் போனது. பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு பிரச்சனைகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருந்து'' என்று பேசியது பெரும் சர்ச்சையானது.

அவரது பேச்சுக்கு, தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் கண்டனம் தெரிவித்தனர். அவர்களது அறிக்கையில், கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை காமகோடி தெரிவித்திருப்பதாக கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு நிவாரணம்... நேரில் வந்து அசிங்கப்பட்ட அமைச்சர் பொன்முடி..!

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி, ' 'ஐஐடி இயக்குநர் பேசியது வருந்தத்தக்கது. அவர் இவ்வாறு பேசுவது உண்மையில் வருந்தத்தக்கது. எந்த அடிப்படையில் எதற்காக ஏன் இப்படி பேசுகிறார் என்றே தெரியவில்லை. ஐஐடி இயக்குநர், ஆளுநர் போல மாறிவிட்டார் எனத் தெரிகிறது'' என ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதற்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து.. மளமளவென பற்றிய தீயால் பல கூடாரங்கள் எரிந்து சாம்பல்..!