இருமொழிக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டால் அதற்கு காரணம் இவர்தான் என்று முதல்வர் பதவியை எடப்பாடியாரிடம் கொடுத்து விடுவாரா? என மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துருகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
அமித்ஷாவிடம் இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தியதற்கு வஞ்சப்புகழ்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அடுத்த முறை டெல்லி செல்லும் போது வக்பு வாரிய திருத்தம் பற்றிப் பேச வேண்டும்' எனவும் அன்புக் கட்டளையிட்டார் ஸ்டாலின்.

வக்பு திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்துக்கு அதிமுக, பாமக ஆதரவு தெரிவித்தன. இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, ''வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தனி தீர்மானத்தை கொண்டு வந்தேன். இங்கு எல்லா கட்சி சார்பில், அந்தந்த கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள், அதாவது பா.ஜ.கவை தவிர, எல்லாரும் வரவேற்று இருக்கிறார்கள். அதற்காக நான் முதலில் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இதையும் படிங்க: ட்விட்டரில் கருத்து மோதல்.. யோகிக்கு மு.க.ஸ்டாலின் பதில்.. விமர்சித்த அண்ணாமலை..!
அதேநேரத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய அதிமுகவிடம் நான் வைக்கும் ஒரு கோரிக்கை. நேற்று முன்தினம் இதே அவையில் இருமொழி கொள்கை பற்றி பேசும் போது, ஒன்றை சொன்னேன். எதிர்க்கட்சி தலைவர் டெல்லிக்கு சென்று இருக்கிறார். யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தியும் வந்து இருக்கிறது என சொன்னேன்.

டடெல்லியில் நிருபர்கள் கேட்டதற்கு, நான் யாரையும் சந்திக்க வரவில்லை. எந்த அரசியல் நிலையிலும் வரவில்லை. எங்களுடைய கட்சி அலுவலகத்தை பார்வைவிட வந்து இருக்கிறேன் என எடப்ப்பாடி பழனிசாமி, சொன்னார். மாலையில் பார்த்தால் கார் மாறி, மாறி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து இருக்கிறார். சந்திக்கட்டும். சந்திப்பது தவறு என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் அங்க போய், தமிழகத்துக்கு வேண்டிய உரிமை மற்றும் இருமொழி கொள்கை பற்றி பேசி இருக்கிறேன் என சென்னை வந்து இறங்கிய பிறகு நிருபரிடம் சொல்லி இருக்கிறார்.

அதற்காக இந்த அவையின் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நன்றி தெரிவிக்கும் அதேநேரத்தில் எப்படி இருமொழி கொள்கை பற்றி வலியுறுத்தி வந்துள்ளேன் என்று சொன்னாரோ, அதேபோல் இந்த பிரச்னையையும் அவர் அடுத்த முறை டெல்லி செல்லும் போது வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்'' எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு கடும் எதிர்வினையாற்றியுள்ள அதிமுக நிர்வாகிகள், '' அமித்ஷாவிடம் இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தியதற்கு இ.பி.எஸ்.,க்கு நன்றி தெரிவித்த முதல்வர் 39 எம்.பிக்களை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை எதற்காக இவர்களுக்கு வக்காலத்து வாங்கி அமித்ஷாவுடன் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

இது முற்றிலும் தவறு. இருமொழிக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டால் அதற்கு காரணம் இவர்தான் என்று முதல்வர் பதவியை எடப்பாடியாரிடம் கொடுத்து விடுவாரா? வக்பு வாரிய திருத்தம் பற்றிப் பேச வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய -பாராளுமன்ற விவகாரம். அதில் பேச இவர்களுடைய 39-எம்.பி.க்களுக்குத்தான் உரிமை உண்டு. மற்றபடி எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது மாநிலங்களுக்கோ அதை நிறைவேற்ற எந்த அனுமதியும் கிடையாது. இவருடைய 39-எம்.பி.க்களும் அங்கே என்ன செய்கிறார்கள்? வெளிநடப்பு செய்து போராட்டம் செய்ய வேண்டியது. ஆனால், அதற்கு பதிலே வாராது'' எனக் கொதிக்கிறார்கள்.
இதையும் படிங்க: மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர்..!