மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அனிமேட்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன் அவரின் உருக்கமான் கடிதம் வைரலாகி வருகிறது. மும்பை அருகே வைல் பார்லேவில் உள்ள சஹாரா ஹோட்டலில் நிஷாந்த் திரிபாதி என்பவர் கடந்த 28ம் தேதி உயிரிழந்தார். இவர் தனது குளியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய இந்த முடிவுக்கு தன் மனைவி அபூர்வாவும், அத்தை பிரார்த்தனாவும் தான் கரணம் என எழுதி வைத்துள்ளார். இதைதான் பணியாற்றும் நிறுவனத்தி இணையத்திலும் பதிவு செய்துள்ளார்.

மேலும் திரிபாதி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தில், “ இது அபூர்வாவுக்கானது. அன்பே நீ இதை படிக்கும் போது நான் இருக்க மாட்டேன். என்ன நடந்ததோ அதற்காக என் கடைசி தருணங்களில் உன்னை வெறுத்திருக்கலாம். ஆனால் நான் உன்னை அப்போதும் நேசித்தேன். இப்போதும் நேசிக்கிறேன். இந்த அன்பு ஒருபோதும் மாறாது. நீயும், பிரார்த்தனா அத்தையும்தான் நான் சந்தித்த அத்தனை போராட்டங்களுக்கும், இப்போது நான் இறப்பதற்கும் காரணம். இது என் அம்மாவுக்கும் தெரியும். அதனால்தான் நான் உன்னை கெஞ்சி கேட்கிறேன். என் அம்மாவிடம் போகாதே. அவரால் இதை தாங்கிக்கொள்ள முடியாது” என எழுதி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: காதலன் இறந்ததால் பேரதிர்ச்சி... இரவே காதலி செய்த விபரீதம்!!
மேலும் தனது தாய் மற்றும் சகோதரிக்கு கடைசி செய்தியை எழுதி வைத்துள்ள திரிபாதி, தன் மனைவிக்கும் கடைசியாக கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில், இறந்த திரிபாதி அனிமேஷன் துறையில் பணியாற்றி வந்ததும், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தற்கொலை செய்வதற்கு முன்பு ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்து தங்கியுள்ளார்.

தற்கொலை நாளில் தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பெயர் பலகையை வைத்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் திரிபாதி வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றொரு சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது திரிபாதி தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
உடனே போலீசார் திரிபாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிஷந்தின் தாய் அளித்த புகாரில் மனைவி அபூர்வா மற்றும் அத்தை பிரார்த்தனா மீது பாரதீய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 108 மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சொல்பேச்சை கேட்காத மனைவி... துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!